சார்பட்டா ‘டான்ஸிங் ரோஸ்’ ஷபீர் கல்லாரக்கல் நடிக்கும் மிஸ்ட்ரி-திரில்லர் படம் ‘பர்த்மார்க்’!

சார்பட்டா பரம்பரை படத்தில், குத்து சண்டையிலேயே டான்ஸ் ஆடிய, ‘டான்ஸிங் ரோஸ்’ ஷபீர் கல்லாரக்கல், தற்போது ஹீரோவாக நடித்துள்ள படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 
 

Dancing Rose Shabheer Kallarakkal starrer Mystery Thriller Birthmark

விக்ரம் ஸ்ரீதரன் எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் மிஸ்ட்ரி த்ரில்லர் படம் ’பர்த்மார்க்’. இந்த திரைப்படம் ஒரு தனித்துவமான கதையை அடிப்படையாகக்  கொண்டு, எடுக்கப்பட்டுளள்து. இதில்  ’சார்பட்டா பரம்பரை’ படத்தில் ‘டான்ஸிங் ரோஸ்’ என்ற கதாபாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பால் புகழ் பெற்ற நடிகர் ஷபீர் கல்லராக்கல் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை  மிர்னா கதாநாயகியாக நடித்துள்ளார்.

இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன் இப்படம் குறித்து கூறும்போது, ‘பர்த்மார்க்’ கதை ஒரு மிஸ்ட்ரி-டிராமாவாக இரண்டு முக்கிய கதாபாத்திரங்களைச் சுற்றி நடக்கும் கதை. இதில், டேனியல் (அ) டேனியாக ஷபீர் கல்லாரக்கல் மற்றும் ஜெனிபராக மிர்னா நடிக்கிறார். இந்த கதை 90’களில் நடக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. கார்கில் போருக்குப் பிறகு தாயகம் திரும்பிய டேனி என்ற சிப்பாய், தன்வந்திரி என்ற 'Birth Village'-க்கு கர்ப்பமாக இருக்கும் தன் மனைவியை அழைத்து செல்கிறார். எந்தவிதமான  சிக்கல்கள் மற்றும் அறுவை சிகிச்சைகள் இல்லாமல் இயற்கையான பிரசவத்திற்குப் பெயர் போன இடம் இந்த கிராமம். இது போன்ற கிராமங்கள் இந்தியாவின் பல பகுதிகளில் இன்றும் உள்ளது.

Dancing Rose Shabheer Kallarakkal starrer Mystery Thriller Birthmark

படத்தின் முன்னணி கதாபாத்திரங்கள் இந்த கிராமத்தில் தங்கியிருந்தபோது, அவர்கள் ஏதோ வித்தியாசமானதாக உணரும் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட கற்பனையான கதையாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த கதை கொரோனா காலக்கட்டத்தில் உருவாக்கினேன். நான் இந்தியாவின் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள இது போன்ற கிராமங்களைப் பார்த்துள்ளேன். அறுவை சிகிச்சை சிக்கல்கள் இல்லாமல் இயற்கையான பிரசவத்திற்கு உதவும் வகையிலான இந்த பாரம்பரியத்தை பல தம்பதிகள் விரும்புவதைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது.

நேத்து தான் திருமணம் நடந்துச்சு! முதலாம் ஆண்டு திருமண நாளில் நயனுக்கு வித்தியாசமாக வாழ்த்து கூறிய விக்கி!

Dancing Rose Shabheer Kallarakkal starrer Mystery Thriller Birthmark

மிஸ்ட்ரி த்ரில்லர் கதை எனும்போது அதிலுள்ள சஸ்பென்ஸ் பற்றி கேட்டபோது இயக்குநர் விக்ரம் பகிர்ந்து கொண்டதாவது, "ஆமாம், படத்தில் சில மர்மங்கள் மற்றும் சஸ்பென்ஸ் உள்ளது. ஆனால், அதை விட எமோஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். குழந்தை பிறக்கும் செயல்முறை ஆண்கள் நினைப்பது போல் எளிதானது அல்ல. உடல்ரீதியான சவால்கள் தாண்டி மனரீதியாக பெண்கள் அனுபவிக்கும் மன உளைச்சல்கள் குறித்தும் பேசப்பட வேண்டும். இது போன்றதொரு காலக்கட்டத்தில் தன் மனைவியுடன் கணவன் வரும்போது அவன் மீண்டும் பிறக்கிறான். மேலும், இது தன் தாய் மீதும் பெண்கள் மீதும் மரியாதையை அவனுக்கு ஏற்படுத்துகிறது".

செர்பியாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்த சமந்தா.! வைரலாகும் 'சிட்டாடல்' குழு புகைப்படங்கள்!

Dancing Rose Shabheer Kallarakkal starrer Mystery Thriller Birthmark

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியுடன் செல்ஃபி எடுக்க முட்டி மோதிய அயல் நாட்டு ரசிகர்கள்!

கிராமத்தின் இயற்கை சூழலை கொண்டு வர வேண்டு என்பதற்காகவே தமிழ்நாடு மற்றும் கேரளா இடையே அமைந்துள்ள மறையூர் கிராமத்தின் குறுக்கே ஒரு கிராமத்தை படக்குழு அமைத்துள்ளது. தொண்ணூறுகளில் நடக்கும் கதை இது என்பதால் அதற்கேற்றபடி, கதையின் ஒவ்வொரு பிரேமும் கச்சிதமாக அமைய தேவையான ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஷபீர் மற்றும் மிர்னா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க தீப்தி, இந்திரஜித், பொற்கொடி, பிஆர் வரலட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios