பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 100 நாட்கள் வெற்றிகரமாக பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து, இரண்டாவது இடத்தை பிடித்தவர் நடன இயக்குனர் சாண்டி. இவர் வெளியே வந்த வேகத்திலேயே ஒரு சில படங்களில் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இவர் ஹீரோவாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியாகியுள்ளது.

தனக்கு செட் ஆகும் கதையில் மட்டுமே நடிக்க வேண்டும் என பிடிவாதமாக இருந்த சாண்டி தற்போது வித்தியாசமான டைட்டில் கொண்ட படத்தில் நடிக்கிறார். 3.33 என்றும் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை, சந்துரு என்பவர் இயக்கவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடிகாரத்தின் பின்னணியில் உள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்க்கும்போது திகில் மற்றும் சஸ்பென்ஸ் கதையம்சம் கொண்ட படமாக இருக்குமா? அல்லது டைம் டிராவல் கதைக்களத்தை கொண்ட படமாக இருக்குமா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த படத்திற்கு ஹர்ஷவர்த்தன் ரமேஷ்வர் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என்று தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Thanq somuch sir ❤️❤️🤩🤩 https://t.co/XVDi7pcwta
— SANDY (@iamSandy_Off) January 3, 2021
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 3, 2021, 6:42 PM IST