ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து, எடுக்கப்பட்ட தலைவி படத்திற்கு தடை விதிக்க முடியாது என அதிரடி தீர்ப்பு வழங்கி ஜெ.தீபா தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தமிழியில் இயக்குநர் ஏ.எல்.விஜய் தலைவி என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடித்து வருகிறார். ஏற்கனவே ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான 'குயின்' என்ற இணையதள தொடரை இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

'தலைவி' படம் மற்றும் வெப் சீரிஸுக்கு தடை விதிக்க கோரி ஜெ.தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு ஏற்கனவே மீண்டும் நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தன்னுடையை தந்தையை தவறாக சித்தரிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக ஜெ.தீபா தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. 

இதற்கு மறுப்பு தெரிவித்த பட நிறுவனம், 'தலைவி' படத்தின் கதையை முழுமையாக தெரிந்து கொள்ளாமல் ஜெ.தீபா பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக கூறியது. இந்த வழக்கை நீதிபதிகள் சுப்பையா மற்றும் சத்திகுமார் சுகுமார் குரூப் அடங்கிய அமர்வு விசாரித்தது. வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நீதிபதி சுப்பையா தலைமையிலான அமர்வு, இந்த வழக்கில் இன்று பிற்பகல் விசாரித்தது.

ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து, எடுக்கப்பட்ட தலைவி படத்திற்கு தடை விதிக்க முடியாது என அதிரடி தீர்ப்பு வழங்கி ஜெ.தீபா தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது. இதனால் எவ்வித, தடைகளும் இன்றி 'தலைவி' படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தற்போது மீண்டும் கொரோனா பிரச்சனை தலை தூக்கியுள்ளதால்... ஏப்ரல் மாதம் வெளியாவதாக கூறப்பட்ட, 'தலைவி' ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.