Asianet News TamilAsianet News Tamil
breaking news image

இந்த விஷயத்தை மறந்துவிட்டாரா இயக்குனர் ஷங்கர்! 'இந்தியன் 2' படத்திற்கு தடையா? அதிர்ச்சியில் படக்குழு!

இந்தியன் 2 படத்தில், அனுமதி இன்றி வர்மக்கலை முத்திரையை உபயோகித்துள்ளதாக கூறி 'இந்தியன் 2' திரைப்படத்திற்கு தடை மதிக்க வேண்டும் என வர்மக்கலை கலைஞர் ஒருவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

Court case against Indian 2 film crew for not taking permission for Varmakalai stamp mma
Author
First Published Jun 28, 2024, 4:29 PM IST

உலகநாயகன் கமலஹாசன் மற்றும் இயக்குனர் சங்கர் கூட்டணியில், 1996 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்தியன் படத்தை தொடர்ந்து... வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்துள்ள 'இந்தியன் 2' திரைப்படம் வெளியாக உள்ளது.

கமலஹாசன் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாக்கியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு, 2019 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து பல பிரச்சனைகள் இப்படத்தை துரத்தியதால் ஒரு வழியாக 5 வருடங்கள் கழித்து இந்த படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கி முடித்துள்ளார்.  இந்த படத்தை லைக்கா நிறுவனம் மற்றும் ரெட் ஜெயின் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது.

Court case against Indian 2 film crew for not taking permission for Varmakalai stamp mma

Rakul Preet Singh: திருமணத்திற்கு பின்னர் கூடிய வெயிட்... தீவிர ஒர்க்கவுட் மூடில் ரகுல் ப்ரீத் சிங்! போட்டோஸ்

படத்தின் ரிலீஸுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இந்த படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மும்பையில் நடந்த இப்படத்தின் புரோமோஷனில் உலகநாயகன் கமலஹாசன், இயக்குனர் ஷங்கர், சித்தார்த், உள்ளிட்ட பட குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது இந்தியன் 2 படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. ட்ரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் நெட்டிசன்கள் பல சந்தேகங்களை எழுப்பி வந்தனர்.

மேலும் கமலஹாசன் 106 வயதிலும் ஆக்ஷனில் அதிரடி காட்டி, பார்ப்பவர்களை பிரமிக்க வைத்தார். மேலும் இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர். தற்போதைய அரசியல் கட்டமைப்பில் இந்தியன் தாத்தா மீண்டும் வந்தால் எப்படி இருக்கும் என்கிற, ஒரு விதமான கற்பனை கதையுடனே இந்த படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் சங்கர்.

Court case against Indian 2 film crew for not taking permission for Varmakalai stamp mma

Karthik : நடிகர் கார்த்திக்கின் பாலிசி! இதனால் பல பட வாய்ப்பை இழந்தாராம்.. இயக்குனர் விக்ரமன் கூறிய சீக்ரெட்!

இந்நிலையில் தற்போது 'இந்தியன் 2' திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மதுரை எச் எம் எஸ் காலனியைச் சேர்ந்த, மஞ்சா வர்மக்கலை தற்காப்பு கலை மற்றும் ஆராய்ச்சி அகாடமியின் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் என்பவர் மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் பரபரப்பு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். "அந்த மனுவில் இந்தியன் படத்தின் முதல் பாகத்தில் வர்மக்கலை முத்திரையை உபயோகிக்க, தன்னிடம் அனுமதி பெற்று படக்குழு பயன்படுத்தியதாகவும்... ஆனால் இரண்டாம் பாகத்தில் அதனை தன்னிடம் அனுமதி பெறாமல் உபயோகித்து உள்ளனர் தெரிவித்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, நடிகர் கமலஹாசன் இயக்குனர் ஷங்கர் மற்றும் லைக்கா நிறுவனம் ஆகியோர் இந்த மனுவுக்கு நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை ஜூலை 9-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. இந்த அனுமதியை பெற கமல் மறந்து விட்டாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios