பாலிவுட் திரையுலகின் Big B என அமிதாப் பச்சனுக்கு கடந்த 11ம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மகன்  அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யா ஆகியோருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

 

இதையும் படிங்க:கோடிகளை கொட்டிக் கொடுக்க வந்த தயாரிப்பாளர்... தெருக்கோடி வரை விரட்டி விட்ட சாய் பல்லவி...!

முதலில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஐஸ்வர்யா ராய்க்கும், ஆராத்யாவுக்கும் தொற்று இல்லை என கூறப்பட்டது. ஆனால் இரண்டாவது சோதனையில் இருவருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தனர். அமிதாப் பச்சனும், அபிஷேக் பச்சனும் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் இருவருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்,  ஐஸ்வர்யா ராயும், ஆராத்யாவும் சில நாட்களுக்கு முன்பு பூரண நலம் பெற்று வீடு திரும்பினர். 

 

இதையும் படிங்க: கவர்ச்சி ரூட்டிற்கு மாறிய ‘96’ நாயகி கெளரி கிஷன்... கண்டபடி கலாய்க்கும் நெட்டிசன்கள்...!

இந்நிலையில் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த ஐஸ்வர்யா ராயும், ஆராத்யாவும் 3 நாட்களுக்கு முன்பு பூரண நலம் பெற்று வீடு திரும்பினர். இதுகுறித்து ட்விட்டரில் அமிதாப் பச்சன் உருக்கமாக பதிவிட்ட ட்வீட் ஒன்று வைரலாகி வருகிறது. அதில், “சிறியவளும் (பேத்தி), பாகுராணியும்(மருமகள் ஐஸ்வர்யா ராய்) வீடு திரும்பிவிட்டனர். மகிழ்ச்சி. என்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சிறியவள் கிளம்பி செல்லும் முன்பு அன்புடன் வந்து அழாதீங்க நீங்களும் விரைவில் வீடு திரும்புவீர்கள்” என கூறிவிட்டுச் சென்றால் என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.