தமிழ், மற்றும் தெலுங்கு திரையுலகில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சார்மி. சமீப காலமாக திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு, திரைப்பட தயாரிப்பில் கால் பதித்துள்ளார். அந்த வகையில் 'ரொமான்டிக்' என்கிற படத்தை தற்போது தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் டிக் டாக் வீடியோவில், ஆல் தி பெஸ்ட் காய்ஸ்... கொரோனா வைரஸ்,  டெல்லிக்கும் , தெலுங்கானாவிற்கும் வந்து விட்டது என மிகவும் மகிழ்ச்சியோடு தெரிவித்து, பெரும் சிரிப்பிற்கு எழுப்பி இருந்தார்.

இவரின் இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் மத்தியில் விமர்சனங்களுக்கு ஆளானது. பலர் கொரோனா வைரஸ் பீதியில் இருக்கும் நிலையில் இவர் கேலி செய்யும் விதத்தில் இதுபோன்ற வீடியோ வெளியிட்டதே பலருடைய கோபத்திற்கு காரணம்.

இந்நிலையில் தன்னுடைய தவறை உணர்ந்த நடிகை சார்மி அதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.மேலும் தான் வெளியிட்ட வீடியோவையும் நீக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது