Asianet News TamilAsianet News Tamil

Veerame Vaagai Soodum : ப்ரோமோஷன் விழாவில் கலந்து கொண்ட விஷால் நாயகிக்கு கொரோனா..அப்போ படக்குழுவினரின் நிலை?

Veerame Vaagai Soodum : வீரமே வாகை சூடவா படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் நாயகி டிம்பிள் ஹயாத்தி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்நிலையில் நாயகி டிம்பிள் இன்று தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Corona to the heroine of veerame vagai sudava..
Author
Chennai, First Published Jan 17, 2022, 3:14 PM IST

நடிகர் விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்ட்ரி மூலம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இப்படத்தை டிசம்பர் மாத இறுதியில் வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கபட்டிருந்தது. ஆனால் அந்த சமயத்தில் பெரிய பட்ஜெட் படங்களான புஷ்பா, ஸ்பைடர்மேன் உள்ளிட்டவை ரிலீசாக உள்ளதால் பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டிருந்தார். 

ஏற்கனவே தீபாவளிக்கு அண்ணாத்த படத்துக்கு போட்டியாக எனிமி படத்தை வெளியிட்ட விஷால், பொங்கலுக்கு அஜித்தின் வலிமை படத்துக்கு போட்டியாக ‘வீரமே வாகை சூடும்’ படத்தை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடிகர் விஷால் ‘வீரமே வாகை சூடும்’ படத்தை ஜனவரி 26-ந் தேதி குடியரசு தினத்தன்று வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டது. 

Corona to the heroine of veerame vagai sudava..
நேற்று வீரமே வாகை சூடவா படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் நாயகி டிம்பிள் ஹயாத்தி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்நிலையில் நாயகி டிம்பிள் இன்று தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios