கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையிலும், எதிர்பாராத விதமாக சில உயிர் சேதங்களும் ஏற்படுகிறது. அந்த வகையில் பிரபல காமெடி நடிகர் ஒருவர் உயிரிழந்துள்ளது ஜப்பான் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஜப்பான் திரையுலகை சேர்ந்த பிரபல காமெடி நடிகர்,  கென் ஷிமுரா. இவர், ஜப்பானிய ’ராக் பேண்ட்’ மற்றும் காமெடி குழுவான ’தி ட்ரிஃப்டர்ஸ்’ என்ற குழுவில் இணைந்து சில காமெடி ஷோக்களில் நடித்துள்ளார்.

மேலும், பல காமெடி ஷோக்கள் மற்றும் ஜப்பான் திரையுலகிலும் காமெடி வேடங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் சிறந்த காமெடி நடிகர் என இடம்பிடித்தவர்.

மேலும் செய்திகள்: விரைவில் வருகிறார் 90'ஸ் கிட்ஸ்களின் சூப்பர் ஹீரோ சக்திமான்..! சொன்னது யார் தெரியுமா?

இந்த நிலையில்  நடிகர் கென் ஷிமுராவிற்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் தனிமை படுத்தப்பட்டு கடந்த சில வாரங்களாகவே, டோக்கியோவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். 

இந்த நிலையில் கென் ஷிமுராவுக்கு கொரோனா காய்ச்சல் மட்டுமின்றி நிமோனியா காய்ச்சலும் ஏற்பட்டது. இதனால் அவருடைய உடல்நிலை மேலும் மோசமானது. தொடர்ந்து சிகிச்சை அளித்தபோதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இவருடைய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.