இந்நிலையில் இவரது பிறந்தநாளுக்கு 'குக் வித் கோமாளி' குழு இன்ப அதிர்ச்சி கொடுத்த வீடியோவை, ஷிவாங்கி வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
விஜய் டிவியில் தற்போது 'குக் வித் கோமாளி' சீசன் 2 நிகழ்ச்சி கலகப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த சீசனில் இடுப்பழகி ரம்யாவை இறக்கி ஒட்டு மொத்த இளம் ரசிகர்களையும் கவர் செய்த விஜய் டிவி, இந்த முறை... தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி ஆகியோரை களமிறங்கியுள்ளது.
அதிலும், இந்த நிகழ்ச்சியில் டஃப் போட்டியாளர், அஷ்வினுக்கு ஏகப்பட்ட ரசிகைகள் உள்ளனர். இந்நிலையில் இவரது பிறந்தநாளுக்கு 'குக் வித் கோமாளி' குழு இன்ப அதிர்ச்சி கொடுத்த வீடியோவை, ஷிவாங்கி வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

பிறந்தநாள் அன்று குக் வித் கோமாளி ஷூட்டிங்கில் கலந்து கொண்ட, அஷ்வினுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, அவரது அறையில் இருந்து ஒருவரை அழைத்து வர வைத்து, கேக் வெட்ட வைக்கிறார்கள். இந்த வீடியோவில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சமையலில் அசத்தி வரும்... கனி, புகழ், மணிமேகலை, பாபா பாஸ்கர், ஷிவாங்கி உள்ளிட்ட பலர் உள்ளனர்.

இந்த வீடியோவை ஷிவாங்கி வெளியிட, ரசிகர்கள் பலரும் அஷ்வினுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வீடியோ இதோ...
