பணிந்தது சர்கார்! வேறு வழியே இல்லாமல் சர்ச்சை காட்சிகள் நீக்கம்!

https://static.asianetnews.com/images/authors/e065074c-8e18-5858-afb6-5be406a1a979.jpg
First Published 8, Nov 2018, 7:10 PM IST
controversy scence removed in sarkar
Highlights

'சர்கார் ' திரைப்படம் விஜய் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே வெளியானது. இந்த படத்தில் குறிப்பாக அதிமுக கட்சி பற்றி மிகவும் மோசமாக விமர்சித்து படம் இயக்கி உள்ளார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் நடிகர் விஜய்யை எதிர்க்கும் வகையில் அதிமுகவினர் பலர் 'சர்கார்' படத்தை எதிர்த்து போராட்டத்திலும் குதித்துள்ளனர்.
 
ஏற்கனவே மதுரையில் இன்று 2 மணி அளவில் ஒளிபரப்பாக இருந்த காட்சிகள் சில திரையரங்கங்களில் நிறுத்தப்பட்ட நிலையில், கோயம்புத்தூர், மற்றும் சென்னையிலும் அதிமுகவினர் போராட்டத்தில் குதித்தனர். திரையரங்களில் வைத்திருந்த பேனர்களை கிழித்ததோடு திரையிட இருந்த சர்கார் காட்சிகளையும் நிறுத்தக்கோரி வலியுறுத்தினார்.

பிரச்சனை பெரிதாவதை தடுக்க, சர்கார் படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என்கிற வேண்டுகோளுக்கு தயாரிப்பாளர் தரப்பு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக திரைப்பட உரிமையாளரும், விநியோகஸ்தருமான திருப்பூர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு தருவோம் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கமும் தெரிவித்துள்ளது. எனவே நாளை காலை 
10 மணிக்கு திரையிட உள்ள சர்கார் படத்தில் குறிப்பிட்ட சர்ச்சை காட்சிகள் நீக்கப்படும் என  தெரிவித்துள்ளனர்.

loader