தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகிபாபு, ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் நடிப்பில் தற்போது டஜன் கணக்கிலான திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. குறிப்பாக யோகிபாபு சிவகார்த்திகேயன் உடன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது. இதையடுத்து ஆகஸ்ட் மாதம் ரஜினியுடன் அவர் நடித்துள்ள ஜெயிலர், செப்டம்பர் மாதம் அவர் இந்தியில் ஷாருக்கான் உடன் நடித்துள்ள ஜவான் ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வர உள்ளன.

வருகிற ஜூன் 9-ந் தேதி யோகிபாபு நடித்துள்ள டக்கர் திரைப்படம் திரைக்கு வர உள்ளது. முதன்முறையாக இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் யோகிபாபு. சித்தார்த் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இதுதவிர கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தயாரித்துள்ள முதல் தமிழ் திரைப்படமான லெட்ஸ் கெட் மேரீடு திரைப்படத்திலும் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... சூடுபிடிக்கும் பைக் சுற்றுலா பிசினஸ்; 10 வெளிநாட்டு பைக்குகளை இறக்குமதி செய்த அஜித் - அதன் விலை இத்தனை கோடியா?

மேலும் அரண்மனை 4, பிரசாந்தின் அந்தகன், மோகனுடன் ஹரா, பூச்சாண்டி, சலூன், வெள்ளை உலகம், மெடிக்கல் மிராக்கிள், பூமர் அங்கிள் என அவர் கைவசம் உள்ள படங்களின் லிஸ்ட் நீண்டுகொண்டே செல்கிறது. இந்நிலையில், யோகிபாபு ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. 

இந்த வீடியோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், நீங்க குண்டா இருப்பது தான் அழகே, தயவு செய்து ஸ்லிம் ஆகி விடாதீர்கள் என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். ஒரு சிலரோ, ஒர்க் அவுட் செய்து சூரி மாதிரி சிக்ஸ் பேக் வைக்கப் போகிறீர்களா என நக்கலாக கமெண்ட் செய்து வருகின்றனர். யோகிபாபுவின் இந்த ஒர்க் அவுட் வீடியோ தான் தற்போது செம்ம டிரெண்டாகி வருகிறது.

Scroll to load tweet…

இதையும் படியுங்கள்... Custody OTT Release Date: வெங்கட் பிரபு இயக்கிய 'கஸ்டடி' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!