comedy actor sathish teach hugging treatment for kamalhassan
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கட்டி பிடி வைத்தியத்திற்கு புகழ் பெற்றவர் கவிஞர் சினேகன். இவர் கட்டி பிடிப்பது அவருக்கு சாதாரணமாக இருந்தாலும் பார்ப்பவர்களுக்கு அவர் பாசத்தை கொஞ்சம் அதிகமாக பொழிவது போன்று தோன்றும்.
இந்நிலையில் நேற்று பிக் பாஸ் மேடைக்கு சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்ட காமெடி நடிகர் இதற்கு ஒரு உதாரணத்தையும் கூறி சினேகனின் கட்டி பிடி வைத்தியம் குறித்து விளக்கினார்.
இதில் , முன்னதாக சக்தி தனக்கு எதாவது ஒரு பிரச்சனை என்று சினேகனிடம் வந்து கூறினால், அதெல்லாம் ஒன்றும் இல்லை ப்ரோ.. பார்த்து கொள்ளலாம் என கூறி எழுந்து நின்று நடித்து காண்பித்தார். அதே ஒரு சிறு பிரச்சனை என்று நமிதா சினேகனிடம் வந்து கூறினால் அவர் எப்படி கட்டிப்பிடித்து ஆறுதல் கூறுவார் என கமலை கட்டி பிடித்து விளக்கமாக கூறினார்.
