“பீட்சா” படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் காமெடி நடிகர் கருணாகரன். இதையடுத்து இவர் நடித்த சூது கவ்வும் படத்தில் இடம் பெற்ற  காசு.. பணம்... துட்டு....மணி...மணி... பாடல் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றது. அதன் பின்னர், “ஜிகர்தண்டா”, “லிங்கா”, “நேற்று இன்று நாளை”, “விவேகம்”, “இருமுகன்” என பல படங்களில் நடித்துள்ளார். 

 

இதையும் படிங்க: “மெர்சல்” படத்தில் நடிக்க மறுத்தது ஏன்?... முதன் முதலாக மனம் திறந்த ஜோதிகா...!

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் கருணாகரன் விஜய்யை கலாய்த்தும், கமல் ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்தும் பதிவிட்ட ட்வீட்கள் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் இவருக்கு காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

 

இதையும் படிங்க: பச்சை நிற உடையில் பளீச் கவர்ச்சி... இளசுகளை திண்டாட வைத்த யாஷிகா ஆனந்த்...!

தற்போது சிம்புவுடன் “மாநாடு” படத்தில் நடித்து வரும் நிலையில் கருணாகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது போன்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதுபற்றி விசாரித்த போது கருணாகரனுக்கு படப்பிடிப்பின் போது பலமுறை காலில் அடிபட்டுள்ளது. கடைசியாக மாநாடு பட ஷூட்டிங்கின் போது காலில் அடிபடவே, அவர் ஸ்கேன் செய்து பார்த்துள்ளார். அப்போது அவருக்கு மூட்டு கிழிந்துள்ளது தெரியவந்துள்ளது. தற்போது அதற்கான அறுவை சிகிச்சை முடிந்துள்ளதாகவும், இன்னும் இரண்டு வாரங்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தெரியவந்துள்ளது.