Asianet News TamilAsianet News Tamil

அழகின் தேவதையாய் மிளிரும் மிர்னாலினி ரவி...கோப்ரா நாயகியின் க்யூட் போட்டோஸ்

பல படங்களில் நடித்திருந்த போதிலும் இவருக்கு தமிழில் பெரிதாக வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை.

cobra actress Mirnalini Ravi latest new look photos
Author
First Published Sep 9, 2022, 9:58 PM IST

உலக அளவில் பொழுதுபோக்கு ஊடகமாக கொண்டாடப்பட்ட டிக் டாக் மற்றும் டப்ஸ்மேஷ் மூலம் பிரபலமானவர்கள் பலர். அவர்களில் ஒருவர் தான் மிர்னாலினி ரவி.  தொடர்ந்து டிக் டாக் மற்றும் டப்ஸ்மாஷ் மூலம் வீடியோக்களை பதிவிட்டு வந்த இவரின் வீடியோவை பார்த்த இயக்குணர் தியாகராஜ குமாரராஜா சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கொடுத்தார். துணை வேடத்தில் நடித்த இவர் சுசித்திரனின் சாம்பியன் படத்தில் முன்னணி பெண் நடிகையாக அறிமுகமானார்.

 தமிழைத் தொடர்ந்து தெலுங்கிற்கு சென்ற மிர்னாலினி ரவி  கடலகொண்ட கணேஷ் என்னும் படத்தில் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து எனிமி, எம்ஜிஆர் மகன், ஜாங்கோ உள்ளிட்ட படங்களில் தோன்றியிருந்தார்  மிர்னாலினி ரவி. தமிழ் ரசிகர் மத்தியில் பிரபலமமானார் இவர் தற்போது தெலுங்கில் அம்மா மச்சேந்திரா என்னும் படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.  பல படங்களில் நடித்திருந்த போதிலும் இவருக்கு தமிழில் பெரிதாக வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை.

மேலும் செய்திகளுக்கு...Breaking:அதிர்ச்சி... கவிஞர் கபிலனின் மகள் தூரிகை தூக்கிட்டு தற்கொலை!

மேலும் செய்திகளுக்கு... மேகம் கருக்காத பாடலை அடுத்து அரபிக் குத்தில் கலக்கும் ஜப்பானியர்..வைரலாகும் வீடியோ இதோ

இருந்தும் தெலுங்கு படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகை மற்றும் சாம்பியன் படத்திற்காக சிறந்த பெண் அறிமுகம் உள்ளிட்ட விருதுகளுக்காக இவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.  சமீபத்தில் விக்ரமுடன் இவர் நடித்திருந்த கோப்ரா படம் சமீபத்தில் வெளியாகி கலமையான விமர்சனங்களை பெற்றது.

சுமாரான வசூலை பெற்ற இந்த படம் தோல்வி படமாக கருதப்பட்டது. விநாயகர் சதுர்த்தி வெளியீடான இது விக்ரமின் திருவிழா ரிலீஸ் ஆக கொண்டாடப்பட்டது. அதோடு முன்னதாக இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி பெற்ற வரவேற்பு கூட படத்திற்கு கிடைக்கவில்லை. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் விக்ரம், ஸ்ரீநிதி செட்டி, இர்பான் பதான், கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். பல வேடங்களில் தோன்றியிருந்த நாயகன்  வெளிநாடுகளில் இருக்கும் எதிரிகளை பல வேடமிட்டு கொலை செய்யும் கதைக்களத்தை இந்த படம் கொண்டிருந்தது.

தமிழ்நாட்டில் விநியோகிக்கும் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெற்றது. 100 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்த படம் ரூ.44 கோடிகளை மட்டுமே வசூல் செய்திருந்தது.  இந்தியா முழுவதும் கடந்த ஆகஸ்ட் 31  ம் தேதி வெளியிடப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு...பொன்னியின் செல்வன் நாயகன் கல்கியின் பிறந்தநாளை கொண்டாடும் படக்குழு..சிறப்பு காணொளி இதோ

 

Follow Us:
Download App:
  • android
  • ios