அரபிக்குத்து  பாடலுக்கு ஜப்பானியர் ஒருவர் அழகாக ஆடியுள்ள விஜய் போலவே ஆடும் அவரை விஜய் ரசிகர்கள் பாராட்டி உள்ளனர்.

படத்தின் பாடல் பிரபலமாகிவிட்டால் அந்த பாடலை ரீல்ஸ் செய்யும் பழக்கம் சமீபகாலமாக அதிகமாகி விட்டது. அதன்படி முன்னதாக வெளியாகி இருந்த அரபிக் குத்து பாடலை உலகில் உள்ள பலரும் ரீல்ஸ் செய்தனர். அந்த வீடியோக்கள் சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து தனுஷின் திருச்சிற்றம்பலம் பாடலான தேன்மொழி மற்றும் மேகம் கருக்காதா உள்ளிட்ட பாடல்களும் அதிக அளவில் ரீல்ஸ் செய்யப்பட்டது. அந்த பாடலை ஜப்பானை சேர்ந்த இருவர் தனுஷ் மற்றும் நித்யா மேனன் போலவே ஆடி இருந்தது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
View post on Instagram

மேலும் செய்திகளுக்கு...பொன்னியின் செல்வன் நாயகன் கல்கியின் பிறந்தநாளை கொண்டாடும் படக்குழு..சிறப்பு காணொளி இதோ

தற்போது விஜயின் பீஸ்ட் படத்திலிருந்து வெளியான அரபிக்குத்து பாடலுக்கு ஜப்பானியர் ஒருவர் அழகாக ஆடியுள்ள விஜய் போலவே ஆடும் அவரை விஜய் ரசிகர்கள் பாராட்டி உள்ளனர். நெல்சன் இயக்கத்தில் வெளியான அரபிக் குத்து பாடலுக்கு அனிருத் இசையமைக்க சிவகார்த்தியேகன் வரிகள் இயற்றி இருந்தார். படம் இந்த ஆண்டு துவங்கத்தில் வெளியாகி கலமையான விமர்சனங்களை பெற்றிருந்தது. ராணுவ வீரராக விஜய் நடித்த இந்தப் படம் தீவிரவாதிகளிடம் அகப்பட்டுக் கொள்ளும் மக்களை காப்பாற்றும் நாயகன் சார்ந்த கதையாக அமைந்திருந்தது. தற்போது வம்சி பைடிப்பள்ளிஇயக்கத்தில் விஜய் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். 

மேலும் செய்திகளுக்கு...விஜய் ராஷ்மிகாவின் வாரிசு...வெளியானது புதிய அப்டேட்

View post on Instagram

மேலும் செய்திகளுக்கு...படகில் பிகினியுடன் தண்ணீரில் அனல் பறக்கவிட்ட லைகர் பட நாயகி அனன்யா பாண்டே

இதில் விஜய் , பூஜா ஹெக்டே , செல்வராகவன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் உலகளவில் சுமார் ரூ. 236.90–250.05 கோடிகளை வசூலித்தது. ஏற்கனவே இந்த படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றிருந்தது.