Ajith 62 movie update: வலிமை வெற்றியை தொடர்ந்து, அஜித்தின் 62 வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். இந்த தகவல், வெளியாகி அஜித் ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது.
வலிமை வெற்றியை தொடர்ந்து, அஜித்தின் 62 வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். இந்த தகவல், வெளியாகி அஜித் ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித்தின் நடிப்பில், கடந்த பிப்ரவரி 24 இம்தேதி வெளியாகிய வலிமை திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இன்றும் திரையங்குகளில் ரசிகர்களால் கொண்டாப்பட்டு வருகிறது.

வலிமை வெற்றி:
போனிகபூர் தயாரிப்பில் உருவான வலிமை திரைப்படத்தை, நேர்கொண்ட பார்வை படத்தின் இயக்குனர் எச்.வினோத் இயக்கியுள்ளார். ரசிகர்களின் பேராதரவை தொடர்ந்து வலிமை திரைப்படம் 200 கோடியை கடந்து பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பி வருகிறது.
AK 61 படம்:
இந்த வெற்றியை தொடர்ந்து, அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி மீண்டும் இரண்டாவது முறையாக ‘அஜித் 61’ படத்தில் இணைகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படப்பிடிப்பிற்காக அண்ணா சாலை பகுதியில், செட் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன.
AK 62 படத்தின் அறிவிப்பு:

இப்படம் தொடங்கும் முன்பே அஜித்தின் அடுத்த படமான AK 62 படம் குறித்த அப்டேட் இணையத்தில் பரவ தொடங்கின. அந்த வகையில் AK 62 படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாகவும், அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். படம் முழுக்க முழுக்க நகைச்சுவை மற்றும் ரொமான்ஸ் காட்சிகளை மையமாக கொண்டது என்று கூறப்படுகிறது.
திரை பிரபலங்கள் வாழ்த்து:

அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்த விக்னேஷ் சிவனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி, பா.ரஞ்சித், மங்காத்தா பட இயக்குனர் வெங்கட்பிரபு, நெல்சன், பிரசன்னா, கலையரசன், எஸ். ஜே. சூர்யா உள்ளிடோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
விக்னேஷ் சிவன், நயன்தாரா ஆகிய இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கும் நிலையில், இந்த வாய்ப்பினை விக்னேஷ் சிவனுக்கு, பெற்று தந்தது நயன்தாரா என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே விக்னேஷ் சிவன் AK 62 படம் குறித்து பதிவிட்டுள்ளார்..
அதில் அவர் " எல்லாமே இனிமேல் நல்லாதான் நடக்கும், காணும் கனவெல்லாம் இறைவன் அருளால் பலிக்கும். AK 62 படத்தில் பணிபுரியும் பெரிய வாய்ப்பை அளித்த அஜித் சாருக்கு ரொம்ப நன்றி!. என்று நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார். இதனால், நயன்தாரா படு குஷியில் உள்ளாராம்.
