தமிழ் திரை வரலாற்றில் சிவாஜி கணேசனைப் போல ஒரு நடிப்பு அசுரனை நாம் மீண்டும் பார்க்க முடியாது. எவ்வித தொழில்நுட்ப உதவியும் இல்லாத காலத்திலேயே 'நவராத்திரி' படத்தில் 9 வித்தியாசமான கெட்டப்புகளை போட்டு, ரசிகர்களை வாய்பிளக்க வைத்தார். எந்த கதாபாத்திரத்தில் நடித்திலும் அதை அப்படியே நமது கண் முன்கொண்டு வரும் வல்லவர். அதனால் தான் அவர் நடிகர் திலகம். 

இதையும் படிங்க: காதலர் விக்னேஷ் சிவனுக்காக பிரபல நடிகையிடம் தூது போன நயன்தாரா... கோலிவுட்டில் பரபரப்பு...!

சிவாஜி கணேசனின் இந்த சாதனையை முறியடித்தது உலக நாயகன் கமல் ஹாசன். 'தசாவதாரம்' படத்தில் 10 கேரக்டர்களில் நடித்து, ரசிகர்களை மெய்சிலிர்க்க  வைத்தார். அதில் சில கதாபாத்திரங்களில் நடித்தது கமல் தான் என்பதை கண்டுபிடிக்கவே ரசிகர்களுக்கு நீண்ட நேரம் தேவைப்பட்டது. இந்த இரு ஜாம்பவான்களின் சாதனையையும் சீயான் விக்ரம் முறியடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க: ஏ.ஆர்.முருகதாஸ் விஷயத்தில் பலித்த டி.ராஜேந்தர் சாபம்... தர்பாரால் வந்த வினை...!

'கடாரம்கொண்டான்' படத்தை தொடர்ந்து விக்ரமின் 58வது படத்தை இமைக்கா நொடிகள் பட இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். 7 ஸ்கீரின் ஸ்டுடியோ தயாரித்து வரும் இந்த படத்திற்கு ''கோப்ரா'' என பெயரிடப்பட்டுள்ளது. 

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இந்த படத்தில் 'கேஜிஎஃப்' பட நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தில் சியான் விக்ரம் 12 கெட்டப்புகளில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியிட்ட படக்குழு, வரும் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தன்று இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட திட்டமிட்டுள்ளது. அதில் விக்ரமின் 12 கெட்டப்புகளும் இடம் பெறும் என்று தகவல்கள் பரவி வருகின்றன. இந்தப் படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: காதலியாகி டூயட் பாடத்துடிக்கும் அனிகா சுரேந்திரன்... போட்டோ போட்டு சான்ஸ் தேடி தீவிர வேட்டை..!

ஏற்கனவே "தசாவதாரம்" படத்தில் நடித்ததற்காக உலக நாயகனுக்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் என ஒட்டுமொத்த திரையுலகமும் ஆவலாக காத்திருந்தது. இந்நிலையில் "கோப்ரா" படத்தின் மூலம் கோலிவுட்டின் ஆஸ்கர் கனவை விக்ரம் நிறைவேற்றுவார் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.