என்னால சிரிப்ப அடக்க முடியல.. வா ராஜா வா - பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் குறித்து விக்ரம் போட்ட டுவிட் வைரல்

ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமர் ஆகி உள்ளதற்கு இந்திய பிரபலங்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், சியான் விக்ரம் போட்டுள்ள டுவிட் வைரலாகி வருகிறது.

Chiyaan Vikram shares a video and wishes rishi sunak for elected as Britain PM

பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்றுள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் பிரிட்டன் பிரதமர் ஆவது இதுவே முதன்முறை. இதனால் ரிஷி சுனக்கிற்கு இந்தியாவைச் சேர்ந்த திரையுலக பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் சோசியல் மீடியா வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமர் ஆகி உள்ளதை இந்தியர்கள் கொண்டாடினாலும், அந்நாட்டு மக்கள் சிலர் அவர்மீது வெறுப்புடனே உள்ளனர். இது தொடர்பாக டிவி நிகழ்ச்சியில் பேசிய ஒருவர், ஒரு கருப்பினத்தவர், அதுவும் வேறு நாட்டுக்காரருக்கு எப்படி நம் நாட்டின் பிரச்சனைகளை புரிந்துகொள்ள முடியும்” என கூறி இருந்தார்.

இதையும் படியுங்கள்... ரெட் ஜெயன்டுக்கு விஜய் நோ சொன்னதால்... அஜித்தின் துணிவு படத்தை தட்டித்தூக்கிய உதயநிதி - அப்போ வாரிசு யாருக்கு?

இந்த வீடியோவை பகிர்ந்திருந்த ‘தி டெய்லி ஷோ’ நிகழ்ச்சியின் தொகுப்பாளர், திறமை, கொள்கை ஆகியவற்றை வைத்தே ஒருவரை மதிப்பிட வேண்டுமே தவிர, அவரின் நிறத்தை வைத்து மதிப்பிடக் கூடாது’ என கூறி இருந்தார்.

இந்நிலையில், நடிகர் சியான் விக்ரம், தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து, “இதைப் பார்த்ததில் இருந்தே என் சிரிப்பை அடக்க முடியவில்லை. மன்னிக்கவும் இதை நான் பகிர வேண்டும் என நினைத்தேன். முதலில் தமிழ் இந்தியன் அமெரிக்காவின் குடியரசு துணைத்தலைவர் ஆனார், இப்போது இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் முதன்முறையாக பிரிட்டன் பிரதமராகி உள்ளார். வா ராஜா வா..!” என பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... அடுத்தடுத்து வெளியாகும் வாரிசு பட ஸ்டில்ஸ்... ரசிகர்களை மெர்சலாக்கிய விஜய்யின் மாஸ் லுக் போட்டோஸ் இதோ

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios