பிரபல சீரியல் நடிகை பவானி ரெட்டி, முதல் கணவர் இறந்த துக்கத்தில் இருந்து மீண்டு, சமீபத்தில் ஆனந்த் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவரின் முதல் கணவர், பிரபல சீரியல் நடிகர் என்பதால், அவரது முகம்... சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரிச்சியம் அதே நேரத்தில் பவானி ரெட்டியின் இரண்டாவது கணவரை யாரும் அதிகம் பார்த்திருக்க வாய்ப்பில்லை. 

மேலும் செய்திகள்: ராகவா லாரன்சின் ஒரே ட்விட்.. பாதுகாப்பட்ட பெண்கள் - குழந்தைகள்! குஜராத் முதல்வருக்கு உருக்கமான நன்றி !
 

நடிகை பவானி ரெட்டி, விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ரெட்டைவால் குருவி', சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர். தெலுங்கு சீரியல் நடிகையான இவர் தொடர்ந்து தமிழில் பல சீரியல்கள் நடித்து வருவதால்  இவருக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

சமீபத்தில் கூட நடிகர் பிரஜன் நடித்து வந்த, 'சின்னதம்பி' சீரியலில் கதாநாயகியாக நந்தினி என்ற ரோலில் நடித்தார்.  இந்த சீரியல் இவருக்கு மற்றும் இன்றி, பிரஜினுக்கும் மிகப்பெரிய பிரேக் கொடுத்துள்ளது.

மேலும் செய்திகள்: டவல் போல் உடை... பிளாஸ்டிக் கவருக்குள் வித்தியாசமான போட்டோ ஷூட் ! விழுப்புணர்வு ஏற்படுத்தும் பிந்து மாதவி!
 

இவர், கடந்த 2017 ஆம் ஆண்டு, தன்னுடன் நடித்த பிரதீப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் சிறு சிறு பிரச்சனைகள் எழ கணவர் பிரதீப், திருமணம் ஆன எட்டு மாதத்திலேயே, தற்கொலை செய்துக்கொண்டு இறந்தார். கணவர் இறந்த சோகத்தில் இருந்து மீள,  மீண்டும் பவானி ரெட்டி நடிப்பில் கவனம் செலுத்த துவங்கினார். 

இதை தொடர்ந்து இவர் பெற்றோரின் வற்புறுத்தலுக்கு இணங்க இரண்டாம் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார்.  ஆனந்த் என்பவரை பெற்றோர் சம்மதத்துடன், மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார் பவானி ரெட்டி. 

திருமணத்திற்கு பின், பிரபல தொலைக்காட்சியில் முக்கிய ரோலில் நடித்து வந்த 'ராசாத்தி' என்கிற சீரியலில் இருந்தும் விலகினார். தற்போது தன்னுடைய இரண்டாவது கணவருடன், வாழ்த்து வரும் இவர் அடிக்கடி கணவருடன் கொஞ்சி விளையாடும் ரொமான்டிக் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டடு வருகிறார்.

மேலும் செய்திகள்: மூன்றே எழுத்தில் மகளுக்கு பெயர் வைத்த ஜி.வி.பிரகாஷ்! ரகசியத்தை உடைத்த பிக்பாஸ் பிரபலம்!
 

பவானி ரெட்டி இரண்டாவது கணவருடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் இதோ...