”உனக்கும் வைரமுத்துவுக்குமான பஞ்சாயத்து ஒரு முடிவுக்கு வரணும்னா நீ பேசாம அவரையே கல்யாணம் பண்ணிக்கம்மா” என்று ட்விட்டரில் ஆலோசனை சொன்ன ஒரு பிரமுகருக்கு ‘ஆஹா என்ன ஒரு ஐடியா. ஆனா ஆர்வம் இல்லை’ என்று சர்வசாதாரணமாக பதில் அளித்திருக்கிறார் பாடகி சின்மயி.

தினத்தந்தியின் சிந்துபாத் கதை போல தொடந்து தொடருமோ என்று அச்சம் கொள்கிற அளவுக்கு சின்மயி-வைரமுத்து தொடர்பான பஞ்சாயத்தும் கொஞ்சமும் கேப் விடாமல் தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் நடந்த இயக்குநர் வ.கீராவின் ‘பற’ பாராட்டுவிழாவில் திடீரென சம்பந்தமில்லாமல் சின்மயி-வைரமுத்து சமாச்சாரத்தைப் பேச ஆரம்பித்த தயாரிப்பாளர் கே.ராஜன், ‘கவிஞர் மாதிரி பெரிய ஆளுங்க பேரை இப்பிடி சின்ன விசயத்துக்காக சிதைச்சின்னா உன்னை பதிலுக்கு சிதைக்க எங்க ஏரியாவுல ஆளுங்கள வச்சிருக்கேன்’ என்று மிரட்டல் தொனியில் பேசினார்.

அவரது பேச்சின் வீடியோ காணொளியை  தனது ட்விட்டர் பக்கத்தில் எடுத்துப்போட்டு மறுபடியும் சின்மயி பஞ்சாயத்து வைக்க ஆரம்பிக்கவே, ஏற்கனவே டயர்டு மோடில் இருந்த  அவரது ஆதரவாளர்களும் நடுநிலைவாதிகளும் எதிராளிகளும் கருத்துக்களைக் கக்க ஆரம்பித்திருக்கிறார்கள். 

அவர்களில் விநோதமான ஒருவர்,’இதற்கு ஒரே ஒரு தீர்வுதான் இருக்கிறது.பேசாம நீங்க வைரமுத்துவையே கல்யாணம் செஞ்சிருக்கலாம். இந்த ஒரு மேட்டரையே வச்சிக்கிட்டு எவ்வளவு நாளைக்குத்தான் ஜல்லி அடிப்பே. நீ ஒரு பி.ஜே.பி பார்ட்டி ஆள்ங்குறது எங்களுக்கு எப்பவோ தெரியும்’ என்று பதிவிட்டிருக்கிறார்.

இதற்கு எந்த அதிர்ச்சியும் அடையாத சின்மயி ‘என்ன ஒரு ஐடியா. ஆனா எனக்கு இண்ட்ரஸ்ட் இல்ல’ என்று கூலாக பதிலளித்திருக்கிறார்.