காது வழியாக கேட்டு மனதை வருடி கொடுக்கும் பாடல்களுக்கு பல ரசிகர்கள் உள்ளனர். சப்த ஸ்வரங்கள் நிகழ்ச்சி மூலம் ஒரு போட்டியாளராக பங்கேற்று இன்று தன்னுடைய குரல் திறமையின் மூலம் சிறந்த பாடகி என தனக்கென தனி அங்கீகாரத்தை பெற்றுள்ளவர் பாடகி சின்மயி. இந்நிலையில் இவரின் ரசிகர்கள் ஒருவர் சின்மயியின் பாடல்களை இன்ச் பை இன்ச்சாக ரசித்து ஒரு கடிதம் எழுதியுள்ளார். 

அதில் அவர் கூறி இருப்பது... எல்லா மொழியிலயும் பாடணும்னுங்கிறது பாடறவங்க குரல் திறமைய பொறுத்தது. ஆனா ஒரே மொழில வேற வேற தளங்கள்ல பாடறதுக்கு அதவிட திறமை வேணும். குரல் வச்சு மயிலிறகால வருடிக்கொடுக்கவும் தெரியணும், சாட்டையால அடிக்கவும் தெரியணும். 
அந்த காலத்துல LRஈஸ்வரி அப்டி பாடுவாங்க. 'காதோடு தான் நான் பாடுவேன்' ஒரு மூலையில இருந்தா 'இலந்தப்பழம் செக்கச்சிவந்த பழம்'ன்னு வேற மாதிரி இருக்கும். ஒரே மூலம் ஆனா அதோட பரவல் வேற.

இன்னிக்கி அப்டி பரவிக்கிடக்குற நான் ரொம்ப ரசிக்கிற குரல் 'சின்மயி' குரல்.

'சப்தஸ்வரங்கள்'ல பாடின சின்மயிய ஸ்ரீனிவாஸ் தான் ரஹ்மான்கிட்ட அறிமுகப்படுத்தி வச்சார். 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தோட உயிர் பாட்டு 'நெஞ்சில் ஜில் ஜில்'. மேல் வெர்ஷன் பாடினது ஜாம்பவான் ஜெயச்சந்திரன். அதோட பீமேல் வெர்ஷன் ஒரு 18 வயசு பொண்ணுக்கு அமையுறது மிகப்பெரிய சவால். ஜெயச்சந்திரனுக்கு ஈடு குடுத்து பாடணும். அந்த பாட்டு குடுக்குற எமோஷன் அந்த அளவுக்கு ராவ்வாக இருக்கும். அதையும் ஏமோட் பண்ணனும். இத குரல்ல வெளிப்படுத்துறதுக்கு இப்படியொரு சின்னப்பொண்ண செலக்ட்  பண்ணது ரஹ்மானோட தைரியம். பாட்டு ரிலீஸ் ஆனதும் தெரிஞ்சுது அது எவ்ளோ நல்ல சாய்ஸ்னு. எந்த இடத்துலயும் பாட்டோட ஜீவன்ல இருந்து விலகாம சின்மயி பாடிருப்பாங்க.'ஒரு தெய்வம் தந்த பூவே' ன்னு உள்ள இருந்து வர்றப்போ அது தான் முதல் முத்திரைன்னு தெளிவா சொல்ற மாதிரி இருக்கும். மொட்டுல இருந்து பூ வர்ற மாதிரி.

ரஹ்மான் தான் சின்மயியோட ஆஸ்தானம். எத்தனையோ பாட்டு. ஒவ்வொண்ணும் ஒவ்வொரு ராகம். பாய்ஸ் படத்துல 'ப்ளீஸ் சார்' - ஒரு சின்ன டிராக் அது. அதுல 'இன்னிசைப்பாடி வரும் பறவைகள் நாங்கள்' வரில பூவா இருந்தது பறவையா மாறி பறந்திருக்கும். 

ஒரு பாட்ட சொல்லாம சின்மயிய பத்தி சொல்ல முடியாதுனா அது 'மய்யா மய்யா. ரொம்ப ரொம்ப கடினமான பாட்டு. மல்லிகா ஆடப்போற பெல்லி  டான்ஸ் குரல்வளையில் குரல் மூலமா வெளிப்படுத்திருப்பாங்க. ' நான் சீனியில் செய்த கடல் வெள்ளை தங்கத்தில் செய்த உடல்' ன்னு ஆரம்பிச்சு பாட்டு முழுவதும் எதோ சிகரத்துல ஏறிப்போற மாதிரி போயிட்டே இருக்கும். முக்கியமா ' அட கடவுளை அடையும் வழியில்' ன்னு வர்றப்போ 'வழியில்ல்ல்...'ன்னு குடுக்குற இலங்கேஷன் . செம்ம அதெல்லாம். அதே படத்துல இதுக்கு அப்டியே ஆப்போசிட் கலர் ல 'ஆருயிரே மன்னிப்பாயா' பாட்டு. அதுலயும் ' ரோஜாப்பூவை முள்காயம் செய்தால் நியாயமா' ன்னு வர்றப்போ ' ‘ரோஜாப்பூவை’ மட்டும் திரும்ப கேக்கணும். எனக்கு ரொம்ப பிடிச்ச ரஹ்மான் பாட்டு கோச்சடையான் படத்துல வர்ற 'இதயம்' பாட்டு. சின்மயியோட வாய்ஸ் ஸ்ட்ரென்த்  முழுசா காட்டின பாட்டு. 'போகுதே' ன்னு குரல உயத்துறப்போ உயிர் போய்டும். அந்த பாட்டெல்லாம் கிளாசிக். ரஹ்மான்க்கு சின்மயி வாய்ஸ் எங்கயாச்சும் புகுத்திவிட்டா நல்லா இருக்கும் நினைப்பார். 'நல்லை அல்லை;, 'மகுடி' எல்லாம் அந்த வகை.

ரஹ்மான் இல்லாம மத்தவங்ககிட்டயும் சின்மயியோட பெஸ்ட் இருக்கு. என்னோட பர்சனல் ஃபேவரட். பொக்கிஷம் படத்துல 'நிலா நீ வானம்' பாட்டு. அந்த 'அன்புள்ள போர்ஷன்  எல்லாமே அவ்ளோ அன்புள்ளதா இருக்கும். அடுத்த முக்கியமான பாட்டு வாகை சூடவா படத்துல 'சர சர சாரக்காத்து'. கிராமத்துமணம் மாறாம வைரமுத்து எழுதிக் குடுத்தத அப்டியே குரல்ல வெளிக்கொடுத்திருப்பாங்க. '‘டீ போல நீ... என்ன ஏன்... ஆத்துற' னு வரி வர்றப்ப டீ ஆத்துற கிளாஸ் மேல போயிட்டு கீழ வர்ற மாதிரி 'ஆத்துற'ன்னு முடியறப்போ அந்த எஸ்பிரஸின் கீழ வரும். ' கொக்கு நீ, மக்கு நீ' இடங்களும் அருமையா வந்திருக்கும்.

சட்டுனு ஞாபகம் வர்ற பாட்டெல்லாம் சொல்லனும்னா ‘நவீன சரஸ்வதி சபதம்’ படத்துல 'காத்திருந்தால் அன்பே', 'மாஸ்' படத்துல 'நான் அவள் இல்லை', 'குள்ளநரி கூட்டம்' படத்துல 'விழிகளிலே' ‘நீர்ப்பறவை’ல ‘பற பற’ன்னு சொல்லிட்டே போகலாம். ரஹ்மானுக்கு சொல்லனும்னா 'கிளிமஞ்சாரோ', 'நான் உன் அழகினிலே', 'மிஸ் மிஸ் யூ டா', 'சந்திப்போமா', அப்றம் முக்கியமா 'நேற்று அவள் இருந்தாள்'.

சமீபத்துல ரொம்ப ரசிச்ச சின்மயி பாட்டு யுவன் மியூசிக்ல ‘யாக்கை’ படத்துல வந்த 'நான் இனி காற்றில் பாட்டு. அவ்ளோ ரசிச்சேன் இந்த பாட்டையும் இதுல வர்ற சின்மயியையும்.

என்னதான் பாட்டெல்லாம் வரிசையா சொல்லிட்ருந்தாலும் சின்மயி குரல்ல மறக்க முடியாத விஷயம் 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்துல ஜெஸ்ஸியா பேசின '’என்ன அழ வைக்காத கார்த்திக்" என தன்னுடைய வாழ்த்து மடலை முடித்துள்ளார் அந்த ரசிகர்.