’பொள்ளாச்சி பாலியல் பயங்கரங்கள் வெளியானதை ஒட்டி ஆண்களுக்கு என்மேல் அன்பு பொங்கி வழிகிறது’ என்கிறார் ட்விட்டர் நாயகியும் பிரபல பாடகியுமான சின்மயி.

’பொள்ளாச்சி பாலியல் பயங்கரங்கள் வெளியானதை ஒட்டி ஆண்களுக்கு என்மேல் அன்பு பொங்கி வழிகிறது’ என்கிறார் ட்விட்டர் நாயகியும் பிரபல பாடகியுமான சின்மயி.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வலைதளப் பக்கங்கள் புழக்கத்தில் வந்த காலத்திலிருந்தே ஏதாவது வம்புகளை வலைவீசித் தேடிப்பிடித்து வசவுகளை வாங்கிக் கட்டிக்கொள்பவர் பாடகி சின்மயி. அதிலும் வைரமுத்து மீது இவர் மி டு’ புகார் கொடுத்த பிறகு அசிங்க அசிங்க கமெண்டுகளால் தொடர்ந்து அர்ச்சிக்கப்பட்டார். அந்த கமெண்டுகளைப் பொதுவெளியில் பகிர்ந்து புலம்புவதையும் வாடிக்கையாக வைத்திருந்தார்.

இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் சம்பவங்களை ஒட்டி சின்மயிக்கு எதிராக இருந்த ஆண்கள் அத்தனை பேரும் உத்தமர்களாக மாறிவிட்டார்கள் போல. இதுகுறித்து சற்றுமுன்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்ட சின்மயி,...நீண்ட காலத்திற்குப் பிறகு எனது கமெண்ட் பாக்ஸ் ஆண்களின் கருணையான வார்த்தைகளால் நிரம்பி வழிகிறது. பொள்ளாச்சி பாலியல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததை ஒட்டி நடந்த இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்று நினைக்கிறேன். பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியே சொல்லத் தயங்குவதால் பொள்ளாச்சி போன்ற எண்ணிக்கையற்ற சம்பவங்கள் வெளியே வராமல் இருக்கின்றன’ என்கிறார்.