பாராட்டுக்கு நன்றி எனச் 'சொல்ல மாட்டேன்'... நடிகர் கார்த்தியின் வாழ்த்துக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட ட்வீட்!

நடிகர் கார்த்தி விவசாயிகள் நலன் கோரி முதல்வருக்கு வைத்த கோரிக்கைக்கு ட்விட்டர் மூலம் பதிலளித்துள்ளார்.
 

Chief Minister Stalin responded to actor Karti request through a tweet

நடிகரும், உழவன் அறக்கட்டளையின் நிறுவனருமான கார்த்தி இந்த முறை தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் விவசாயிகள் பயன் பெரும் தமான திட்டத்தின் இடம்பெற்றதற்கு தன்னுடைய நன்றியை அறிக்கையாக வெளியிட்டு, நன்றி தெரிவித்ததோடு வேண்டுகோள் கொன்றையும் வைத்திருந்தார்.

இந்த அறிக்கையில் கூறி இருந்தாவது... "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களுக்கும் வணக்கம்.
 
வேளாண்மைக்கு தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாகத் தனி பட்ஜெட் தாக்கல் செய்து வருவதற்கு  எங்களுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். நேற்றைய  வேளாண் பட்ஜெட்டில்  முக்கியமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரோபோ ஷங்கர் துரும்பா இளைத்ததன் காரணம் என்ன? மனைவி கூறிய விளக்கம்..!

Chief Minister Stalin responded to actor Karti request through a tweet

அதில் நம் மாணவர்கள் உழவு பற்றியும் உழவர்களின் நிலைப் பற்றியும்  அறிந்து கொள்ள வேளாண் சுற்றுலா, சிறு குறு உழவர்களுக்கான வேளாண் கருவிகள் வழங்க நிதி ஒதுக்கீடு, நீர் நிலைகள் சீரமைப்பு , மரபு விதைகள் பரவலாக்கம், அதிக அளவு சிறுதானியங்களை உற்பத்தி செய்யும் உழவர்களுக்கு விருதுகள் போன்ற பல அறிவிப்புகள் இக்காலகட்டத்திற்கு அவசியமானது. இதுபோன்று உழவர்களின் தேவைகளை மிக நுணுக்கமாக ஆராய்ந்து பட்ஜெட்டில் அறிவித்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி.

அதிர்ச்சி.. நடு ரோட்டில் நிர்வாணமாக திரிந்த நடிகையால் பரபரப்பு..!

Chief Minister Stalin responded to actor Karti request through a tweet

அதோடு சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது அவசியமான முன்னெடுப்பு. தற்போது சாமை, வரகு, குதிரைவாலி, போன்றவைகளுக்கு பெரும் தேவை ஏற்பட்டுள்ளது. ஆனால் அவைகளை அரிசியாகப் பிரித்தெடுக்க போதுமான அளவுக்கு இயந்திரங்களும், பழுது ஏற்பட்டால் சரி செய்யத் தேவையான நிபுணத்துவம் பெற்றவர்களும் மிகக் குறைவாக உள்ளனர் என்பது இத்தளத்தில் இயங்குவதன் மூலம் எங்களுக்குத் தெரிய வருகிறது. இதனையும் அரசு கவனத்தில் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

இதோடு மட்டுமன்றி சிறு குறு உழவர்களுக்கு அளிக்கப்படும் வேளாண் கருவிகள் அந்தந்த நில அமைப்புக்கு ஏற்றவாறும், அவர்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டியது மிக அவசியமானதாக உள்ளது. இதுப் போன்ற குறிப்புகளையும் அரசின் திட்டமிடலில் இணைத்துக் கொண்டால், அரசு மேற்கொள்ளும் வேளாண் நலத்திட்டங்கள் இன்னும் பெருவாரியான உழவர்களுக்கும் பொது மக்களுக்கும் பயனளிக்கும் என நம்புகிறோம் என கார்த்தி தெரிவித்திருந்தார்.

கிலோ கணக்கில் தங்க... வைர நகைகளுடன் ... மகாராணி போல் ஜொலிக்கும் நயன்தாரா! வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்!

Chief Minister Stalin responded to actor Karti request through a tweet

கார்த்தியின் இந்த அறிக்கைகைக்கு, தற்போது தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்... தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் போட்டு பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "உழவர் நலன் காக்கச் செயலாற்றும் உங்களைப் போன்றவர்களின் பாராட்டுகளே எங்களுக்கு ஊக்கம்! உங்கள் கருத்துகளைக் கவனத்தில் கொண்டிருக்கிறோம். பாராட்டுக்கு நன்றி எனச் 'சொல்ல மாட்டேன்'; இன்னும் பல திட்டங்கள் தீட்டி உழவர் முகத்தில் மகிழ்ச்சி காண 'செயலாற்றுவோம்' என பதிவிட்டுள்ளார். இதற்க்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios