21-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னை ராயப்பேட்டையில் நேற்று தொடங்கியது.
கடந்த 2003-ம் ஆண்டிலிருந்து இந்தோ சினி அப்ரிசியேஷன் அமைப்பு தமிழக அரசின் ஆதரவுடன் ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. அந்த வகையில் 21-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னை ராயப்பேட்டையில் நேற்று தொடங்கியது. அமைப்பின் தலைவர் சிவன் கண்ணன் தலைமையில் நடிகை பார்வதி நாயர் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
டிசம்பர் 21-ம் தேதி நடைபெற உள்ள இந்த திரைப்பட விழாவில் மொத்தம் 57 நாடுகளின் 126 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இதற்காக 25 தமிழ் படங்கள் அனுப்பப்பட்ட நிலையில், அதில் இருந்து 12 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
ஏசியாநெட்தமிழ்செய்திகளைஉடனுக்குஉடன் Whatsapp Channel-லில்பெறுவதற்குகீழேகொடுக்கப்பட்டுஇருக்கும்லிங்குடன்இணைந்துஇருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மேலும் இந்த திரைப்பட விழாவில் உலக சினிமாவில் 12 படங்களும், இந்திய சினிமாவில் 19 படங்களும் திரையிடப்பட உள்ளன. உலக சினிமாவில் தேர்வான படங்களில் 2 படங்களில் இந்தியாவை சேர்ந்தது.
இந்த திரைப்பட விழாவில் தமிழ் சினிமாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 12 படங்களில் இருந்து சிறந்ததாக தேர்வு செய்யப்படும் முதல் 3 படங்களுக்கு ரூ.7 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்பட உள்ளது. மேலும் உலக சினிமாவில் இருந்து தேர்வு செய்யப்படும் 3 சிறந்த படங்களுக்கு கோப்பை, சான்றிதழ் என மொத்தம் 9 பிரிவுகளில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
சிவகார்த்திகேயனின் அயலான் படத்தை வெளியிட தடை! கேஜேஆர் ஸ்டூடியோ விளக்கம் அளிக்க உத்தரவு
போட்டிப்பிரிவில் திரையிட தேர்வான 12 தமிழ் படங்கள்
- அநீதி – இயக்குநர் வசந்தபாலன்
- அயோத்தி _ இயக்குநர் மந்திரமூர்த்தி
- கருமேகங்கள் கலைகின்றன. – இயக்குநர் தங்கர்பச்சான்
- மாமன்ன – இயக்குநர் மாரி செல்வராஜ்
- போர்தொழில் – இயக்குநர் விக்னேஷ் ராஜா
- ராவணக்கோட்டம் – இயக்குநர் விக்ரம் சுகுமாரன்
- சாயாவனம் – இயக்குநர் அனல்
- செம்பி – இயக்குநர் பிரபு சாலமன்
- ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன் – இயக்குநர் சந்தோஷ் நம்பிராஜன்
- உடன்பால் – இயக்குநர் கார்த்திக் சீனிவாசன்
- விடுதலை பாகம் 1 – இயக்குநர் வெற்றிமாறன்
- விந்தியா பாதிக்கப்பட்ட தீர்ப்பு V3 – இயக்குநர் அமுதவாணன்