Demonte colony 2 Movie Team : திரைத்துறையை சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் வெள்ளப்பாதிப்புகளை சரிசெய்ய 'முதலமைச்சரின் பொது நிவாரண நிதி'க்கு பணம் கொடுத்து வருகின்றனர். 

கடந்த டிசம்பர் 5ஆம் தேதி கரையை கடந்த மிக்ஜாம் புயல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் சேதங்களை ஏற்படுத்தியது. மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை விட, வரலாறு காணாத அளவில் டிசம்பர் 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை பெய்த கனமழை சென்னையை புரட்டி போட்டது. பல்வேறு இடங்களில் வெள்ளநீர் தேங்கியது. 

இதனால் பல மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் கடும் அவதிக்க உள்ளாகினர். இந்நிலையில் இன்று மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரண உதவிகளை வழங்க துவங்கியுள்ளது. மேலும் நடிகர்கள் சூர்யா தொடங்கி, இயக்குனர் அமீர், நடிகர் சூரி, நடிகர் விஷ்ணு விஷால், நடிகர் வடிவேலு உள்ளிட்ட பலரும் தொடர்ச்சியாக தமிழக முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற உதவிகளை காசோலையாக கொடுத்து வருகின்றனர். 

சிம்புவுடன் சேர்ந்து நயன்தாரா செய்த சேட்டைகள்... போன்ல பார்த்து பதறிட்டேன் - பிரபல தயாரிப்பாளர் சொன்ன சீக்ரெட்

இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து, 15 லட்சம் ரூபாய்க் காண காசோலையை தற்போது கொடுத்துள்ளனர் 'டிமான்டி காலனி 2' படக்குழுவினர். மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

"மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் உருவான பாதிப்புகளை துடைத்தெறியும் பணியில் கழக அரசு மும்முரமாக செயல்பட்டு வருகிறது. கழக அரசின் இப்பணிகளுக்கு பலரும் பங்களிப்பும் செய்து வருகின்றனர். 

Scroll to load tweet…

அந்தப் பணிகளுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், 'டிமான்டி காலனி 2' திரைப்படக் குழுவின் சார்பில் அப்படத்தின் கதாநாயகனான தம்பி அருள்நிதி, தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன், இயக்குநர் அஜய் ஞானமுத்து ஆகியோர் இணைந்து ரூ.15 லட்சத்திற்கான காசோலையை 'முதலமைச்சரின் பொது நிவாரண நிதி'-க்கு இன்று நம்மிடம் வழங்கினர். அவர்களுக்கு என் அன்பும் நன்றியும்" என்று கூறியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.