Chandramukhi 2 : மைசூருவில் நடைபெற்று வந்த சந்திரமுகி 2 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கிய இப்படம் ரஜினியின் கெரியரில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இதில் ஜோதிகா, நயன்தாரா, மாளவிகா, பிரபு, வடிவேலு, நாசர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. குறிப்பாக இப்படத்தில் ரஜினி - வடிவேலு இணைந்து நடித்த காமெடி காட்சிகள் இன்றளவும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில், சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. முதல் பாகத்தில் ஹீரோவாக நடித்த ரஜினி இப்படத்தில் நடிக்கவில்லை, அவருக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார். முதல் பாகத்தை இயக்கிய பி.வாசு தான் இப்படத்தையும் இயக்குகிறார். லைகா நிறுவனம் இப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கிறது.

இதையும் படியுங்கள்... புஷ்பா நாயகனுக்கு கிடைத்த அங்கீகாரம்... அமெரிக்காவில் இந்திய தேசிய கொடியுடன் வலம் வர உள்ள அல்லு அர்ஜுன்

இப்படத்தில் வடிவேலு நகைச்சுவை வேடத்தில் நடிக்க, ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக லட்சுமி மேனன், மகிமா நம்பியார் உள்பட 5 ஹீரோயின்கள் நடிக்கிறார்களாம். பாகுபலி பட இசையமைப்பாளர் மரகதமணி தான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

சந்திரமுகி 2 படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் மைசூருவில் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், தற்போது அப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதையொட்டி ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் ராதிகா. அந்த வீடியோவில் நடிகர் வடிவேலுவின் கன்னத்தில் லாரன்ஸும், ராதிகாவும் குத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் லாரன்ஸ் மெதுவாக குத்தினாலும், ராதிகா சற்று ஓங்கி குத்தி விடுகிறார். இதைப்பார்த்த லாரன்ஸ் செம்ம அடி அடிச்சுட்டாங்க என சொல்ல, இதற்கு வடிவேலு கொடுத்த எக்ஸ்பிரஷன் தான் அல்டிமேட். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

Scroll to load tweet…

இதையும் படியுங்கள்... parthiban : மோடி ஜி பெயரை சொன்னாலே தேசிய விருதா? - டுவிட்டரில் பரபரப்பை கிளப்பிய பார்த்திபன்