Asianet News TamilAsianet News Tamil

parthiban : மோடி ஜி பெயரை சொன்னாலே தேசிய விருதா? - டுவிட்டரில் பரபரப்பை கிளப்பிய பார்த்திபன்

parthiban Tweet : பிரதமரின் பெயரை உச்சரித்தாலே தேசிய விருதென்றால், ”மோடிஜீக்கு ஜே”என கோஷமிடும் கூட்டத்தில் ஒவ்வொருவருக்கும் கொடுப்பாங்களாக்கும் என பதிவிட்டுள்ளார் பார்த்திபன்.

Parthiban Tweet about Laal Singh chaddha and National Award
Author
Tamil Nadu, First Published Aug 9, 2022, 2:29 PM IST

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் இயக்குனர் பார்த்திபன். இவர் கடைசியாக எடுத்த இரவின் நிழல் திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. உலகிலேயே நான் லீனியர் முறையில் படமாக்கப்பட்ட முதல் சிங்கிள் ஷாட் திரைப்படம் இதுதான் என பார்த்திபன் கூறி இருந்தார்.

இந்நிலையில், அமீர்கான் நடிப்பில் வருகிற ஆகஸ்ட் 11-ந் தேதி வெளியாக உள்ள திரைப்படம் லால் சிங் சத்தா. இப்படத்தை தமிழில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தான் வெளியிடுகிறது. தமிழ் திரையுலக நட்சத்திரங்களுக்காக இப்படத்தின் ஸ்பெஷல் ஷோ கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் திரையிடப்பட்டது.

இதில் நடிகரும், இயக்குனருமான பார்த்திபனும் கலந்துகொண்டு படத்தை பார்த்து ரசித்தார். இந்த படம் குறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது : “லால் சிங் சத்தா படம் பார்த்து கண்கலங்க அமீர்கானிடம் சொன்னேன், வெறுப்புணர்வும், எதிர்மறை எண்ணங்களும் நிரம்பி உள்ள இந்த சமூகத்திற்கு இந்த படத்தின் மூலமாக அன்பை பரப்பி உள்ளீர்கள், அற்புமான படம் என்றேன். 

இதையும் படியுங்கள்... ஒருவழியாக நயன்தாராவின் திருமண வீடியோ வெளியீடு குறித்த அப்டேட்டை வெளியிட்ட நெட்பிளிக்ஸ்! எப்போ ரிலீஸ் தெரியுமா?

அன்பை, அர்ப்பணிப்பை, காதலை, கடமையை, கண்ணியத்தை இதை வட சிறப்பாக ஒரு படத்தில் சொல்ல முடியுமா? வெறுப்பை பருப்பாய் கடைந்து, அதில் அருவருப்பையும், அவமதிப்பையும் தாளித்துக் கொட்டி Dal Makhani  செய்யும் சிலர் நிறைந்த இந்நாட்டிற்கு இப்படம் அவசியம். தூர்தர்ஷனிலிருந்து சுதந்திர தினத்திற்கு பிரதமரின் கோரிக்கைப் பற்றி ஒரு வீடியோ அனுப்புங்கள் என கேட்க, நான் அனுப்ப... தேசிய விருதுக்கா?”

என்ன ஒரு கலை மதிப்பு? பிரதமரின் பெயரை உச்சரித்தாலே தேசிய விருதென்றால், ”மோடிஜீக்கு ஜே”என கோஷமிடும் கூட்டத்தில் ஒவ்வொருவருக்கும் கொடுப்பாங்களாக்கும், ஒவ்வொரு மயில் விருது” என பதிவிட்டுள்ளார். வழக்கம்போல் அவரது இந்த டுவிட் புரியாமல் பலரும் புலம்பி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... 'கடாவர்' படத்தை வெளியிட முடியாமல் சிலர் தடுத்தனர்... செய்தியாளர் சந்திப்பில் அமலா பால் ஆதங்கம்!

Follow Us:
Download App:
  • android
  • ios