சந்திரமுகி 2.. முதல் சாய்ஸ் கங்கனா இல்லை.. ரவுடி பேபிதானாம்? - செமயா இருந்திருக்குமே - வருந்தும் ரசிகர்கள்!
வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி உலக அளவில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் சந்திரமுகி 2. பிரபல மூத்த இயக்குனர் பி. வாசு இயக்கத்தில் பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் நடிகை கங்கனா நடிப்பில் இந்த படம் வெளியாகவுள்ளது.
சுமார் 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் பி. வாசு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் சந்திரமுகி 2. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டு வெளியாகி சக்கைபோடு போட்ட திரைப்படம் தான் சந்திரமுகி. அந்த படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.
இந்த படத்தில் சுரேஷ் சந்திரா மேனன், ராதிகா சரத்குமார், ரவி மரியா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். அதே போல அண்மையில் மறைந்த மூத்த நடிகர் ஆர்.எஸ். சிவாஜி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். சந்திரமுகி படம் வைகை புயல் இல்லாமல் உருவாக வாய்ப்பே இல்லை என்பதை அனைவரும் அறிவர். பிரபல நடிகை கங்கனா ரணாவத் இந்த படத்தில் சந்திரமுகியாக நடித்துள்ளார்.
ஆனால் இந்த திரைப்படத்தில் சந்திரமுகியாக நடிக்க முதலில் தேர்வு செய்யப்பட்டது கங்கனா அல்ல மாறாக சாய் பல்லவி தான் தேர்வு செய்யப்பட்டார் என்ற ஒரு தகவல் இப்பொது வெளியாகியுள்ளது. ஆனால் அவர் அந்த கதாபாக்கத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என்றும், அதனால் தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க கங்கனா தேர்வு செய்யப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்பது தெரியவில்லை.
இறுதியாக கார்கி படத்தில் தோன்றிய சாய் பல்லவி, பிரபல ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் தற்பொழுது சிவகார்த்திகேயன் நடித்துவரும் அவரது 21 வது திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தயவு செஞ்சி ஹெல்ப் பண்ணுங்க..! காரில் அமர்ந்தபடி பாவனி காதலர் அமீர் வெளியிட்ட வீடியோ..!