case filed against famous Tamil director for his opinion against Hindu lord

இயக்குனர் இமயம் பாரதிராஜா சமீப காலமாக ,சமுதாய பிரச்சனை பலவற்றிற்கும் எதிராக தனது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். போராட்டங்களிலும் கலந்துவருகிறார். சமீபத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறிய அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில், இயக்குனர் பாரதிராஜாவும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்த போராட்டத்தின் போது இவர் பேசிய விஷயத்தால் இப்போது இவர் மீது வடபழனி காவல் நிலையத்தில் ஒரு வழக்கு பதிவாகி இருக்கிறது. பாராதிராஜா போராட்டத்தின் போது பேசுகையில் விநாயகர் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்பட்டவர் என்றும், அவர் தமிழ் கடவுள் இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.

பாரதிராஜா தெரிவித்த இந்த கருத்து இந்துக்கடவுள்களை அவமானப்படுத்துவதாக உள்ளது, என கூறி இந்து மக்கள் முன்னணி கட்சியினர் இப்போது பாரதிராஜா மீது வடபழனி காவல் நிலையத்தில் வழக்கு தொடர்ந்திருக்கின்றனர்.