விஜயகாந்த் முதலில் தனது இளைய மகனுக்க்கு சவுக்கத் அலி என்று பெயர் வைத்ததும் பின்னர் சில காரணங்களால் அந்த பெயரை மாற்றி சண்முக பாண்டியன் என்று பெயர் வைத்ததும் பலருக்கும் தெரியாத தகவல்.

விஜயகாந்த் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில் பிரபலங்கள் பலரும் விஜயகாந்த் உடனான் தங்கள் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். மேலும் விஜய்காந்த பேசிய வீடியோக்கள் மற்றும் அவர் நடித்த திரைப்படங்களின் காட்சிகள் பாடல்களை ஆகியவை சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் விஜயகாந்த் குறித்த மற்றொரு சுவாரஸ்ய தகவல் வெளியாகி உள்ளது. விஜயகாந்த் முதலில் தனது இளைய மகனுக்க்கு சவுக்கத் அலி என்று பெயர் வைத்ததும் பின்னர் சில காரணங்களால் அந்த பெயரை மாற்றி சண்முக பாண்டியன் என்று பெயர் வைத்ததும் பலருக்கும் தெரியாத தகவல்.

ஏசியாநெட்தமிழ்செய்திகளைஉடனுக்குஉடன் Whatsapp Channel-லில்பெறுவதற்குகீழேகொடுக்கப்பட்டுஇருக்கும்லிங்குடன்இணைந்துஇருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

ஆம். விஜயகாந்த் தனது இரண்டாவது மகன் சவுக்கத் அலி என்று பெயர் சூட்டியுள்ளார். விஜயகாந்திற்கு இப்ராஹிம் ராவுத்தரை போன்றே சவுக்கத் அலி என்ற நண்பர் இருந்துள்ளார். எனவே தனது நண்பனின் நினைவாகவும், தான் ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டவன் என்பதை நிரூபிக்கும் வகையில் சவுக்கத் அலி என்ற பெயரை வைத்தாராம்.

இந்த தகவலை விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனே ஒருமுறை பேட்டியில் கூறியிருக்கிறார். தாய், தந்தை இந்து மதமாக இருக்கும் போது, மகனுக்கு மட்டும் எப்படி முஸ்லீம் பெயர் வரும் என்று குழப்பம் வரலாம் என்றும், பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் பெறுவதில் சிக்கல் ஏற்படலாம் என்று அதிகாரிகள் சிலர் விளக்கி உள்ளனர். இதன் காரனமாகவே சவுக்கத் அலி என்ற பெயரை சண்முகப்பாண்டியன் என மாற்ற விஜயகாந்த் ஒப்புக்கொண்டாராம்.

விஜயகாந்த் போல மனிதநேயமிக்க ஒரு தலைவரை பார்ப்பது அரிது : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் புகழாரம்..

முதலில் விஜயகாந்தின் உறவினர்கள் சிலர் கூட பெயரை மாற்ற சொல்லி கூறினார்களாம். ஆனால் அதை எல்லாம் அவர் கண்டுகொள்ளவே இல்லையாம். பாஸ்போர்ட், சான்றிதழ் விவகாரங்களில் சிக்கல் வரக்கூடாது என்பதற்காகவே தனது முடிவை மாற்றிக்கொண்டாராம். மேலும் தனது படங்களில் கூட முஸ்லீம் ஒருவர் தனக்கு நண்பராக இருப்பது போன்ற காட்சிகளை விஜயகாந்த் வைத்திருப்பார். மேலும் இஸ்லாமிய மக்கள் மீது நட்புறவு பேணியவர் என்பது குறிப்பிடத்தக்கது.