Vijayakanth Best Dance : பிரபல நடிகர் விஜயகாந்த் அவர்களின் மரணத்திற்கு உலக நாயகன் கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வளம் வந்த நடிகர் விஜயகாந்த் அவர்களுடைய திரை வாழ்க்கையில் மிக மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்று தான் 1992 ஆம் ஆண்டு வெளியான "பரதன்" என்கின்ற திரைப்படம். இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் சபாபதி இயக்கி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஆக்சன், சென்டிமென்ட் மாற்றும் நகைச்சுவை என்று அனைத்திலும் கைதேர்ந்த கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தான் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல, அதைவிட சிறந்த டான்ஸர் என்பதை நிரூபித்த முதல் திரைப்படம் இந்த பரதன் திரைப்படம். அதுவரை கேப்டன் விஜயகாந்த் அவர்கள் அப்படி ஒரு நடனமாடி யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். 

கோலிவுட்டின் கேப்டன்... அரசியலில் கருப்பு எம்ஜிஆர் - சோதனைகளை கடந்து விஜயகாந்த் சாதனை நாயகனாக உருவெடுத்த கதை!

பரதன் திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா அவர்களுடைய குரலில் உருவாகி இன்றளவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பாடல் தான் "புன்னகையில் மின்சாரம்" என்கின்ற பாடல். இந்த பாடலில் பிரபல நடிகை பானுப்பிரியா, நடிகர் விஜயகாந்த் அவர்களோடு இணைந்து ஆடி இருப்பார். தமிழ் சினிமா வரலாற்றிலேயே 182 கட் கொண்ட ஒரே பாடலாக இன்றளவும் திகழ்ந்துவரும் ஒரு பாடல் தான் இந்த "புன்னகையில் மின்சாரம்" என்கின்ற பாடல். 

இந்த பாடல் இப்பொழுதும் youtube தளத்தில் மிகவும் டிரெண்டாக உள்ள ஒரு பாடல் தான், இந்த பாடலை பார்க்கும்பொழுது இதில் நடனம் ஆடுவது விஜயகாந்த் தானா? இல்லை பிரபுதேவா? என்கின்ற சந்தேகமே நமக்கு எழும் அளவிற்கு அவ்வளவு நேர்த்தியாக தனது நடன திறமையை காண்பித்து இருப்பார் விஜயகாந்த். இந்த பாடலுக்கு கோரியோக்ராப் செய்தது பிரபல நடன இயக்குனரும், நடிகருமான பிரபுதேவா என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த பாடலுக்கு பிறகு 1999 ஆம் ஆண்டு விஜயகாந்த் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான "கண்ணுபட போகுதய்யா" என்கின்ற படத்தில் வரும் "மூக்குத்தி முத்தழகு" என்கின்ற பாடலும் பிரபுதேவா உடைய நடன அமைப்பில் உருவான பாடல் தான். இந்த இரண்டு திரைப்பட பாடல்களும் நடிகர் விஜயகாந்த் அவருடைய திரை வாழ்க்கையில் மிக மிக முக்கியமான பாடல்களாகவும். 

விஜயகாந்த் உடலை பார்த்து கண்ணீர் விட்டு தேம்பி தேம்பி அழுத பிரேமலதா... கலங்க வைக்கும் போட்டோஸ்

குறிப்பாக மூக்குத்தி முத்தழகு பாடலை உருவாக்கும் பொழுது "நான் 100 முறை ரீடேக் கேட்டாலும் அதை மனம் கோணாமல் செய்து முடித்து அந்த பாடலை நடனமாடி கொடுத்தார் விஜயகாந்த்" என்று பல மேடைகளில் பிரபு தேவா அவர்கள், விஜயகாந்தை புகழ்ந்து பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.