- Home
- Gallery
- விஜயகாந்த் உடலை பார்த்து கண்ணீர் விட்டு தேம்பி தேம்பி அழுத பிரேமலதா... கலங்க வைக்கும் போட்டோஸ்
விஜயகாந்த் உடலை பார்த்து கண்ணீர் விட்டு தேம்பி தேம்பி அழுத பிரேமலதா... கலங்க வைக்கும் போட்டோஸ்
விஜயகாந்த் உயிரிழந்த நிலையில், அவரது உடலை பார்த்து அவரது மனைவி தேம்பி தேம்பி அழுத காட்சிகள் ரசிகர்களை கலங்க செய்துள்ளது.

1980-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். கோலிவுட்டின் அதிரடி ஆக்ஷன் நாயகனாக வலம் வந்த விஜயகாந்த், தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்தததால் ரஜினி, கமலுக்கு நிகராக பெயரையும், புகழையும் பெற்றார். சினிமாவில் சக்சஸ்புல் ஹீரோவாக வலம் வந்துகொண்டிருந்தபோதே சினிமாவில் உள்ள சங்கங்களில் தன் நிர்வாக திறமையை காட்டி அசத்தினார்.
இதன்பின்னர் படிப்படியாக அரசியலில் நுழைந்த விஜயகாந்த் தேமுதிக என்கிற கட்சியை தொடங்கி குறுகிய காலத்திலேயே அரசியலிலும் விஸ்வரூப வளர்ச்சி கண்டார். தமிழகத்தில் திமுக, அதிமுக என இருபெரும் கட்சிகள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியாக இடம்பெறும் அளவுக்கு அரசியலில் கேப்டனின் கை ஓங்கி இருந்தது.
இதையும் படியுங்கள்... கமல்ஹாசனின் கேமியோ முதல்.. 3D தொழில்நுட்பம் வரை - பலர் அறிந்திடாத கேப்டன் விஜயகாந்த் பற்றிய தகவல்கள்!
கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை நலிவடைந்த நிலையில் வீட்டிலேயே முடங்கி இருந்த கேப்டன் விஜயகாந்துக்கு நேற்று உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளதை கண்டறிந்தனர். இதையடுத்து தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காததால் இன்று அதிகாலை விஜயகாந்த் உயிர் பிரிந்தது.
விஜயகாந்தின் மறைவால் தமிழ் திரையுலகமே கண்ணீரில் மூழ்கி உள்ளது. ஏராளமான சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், விஜயகாந்தின் உடலை ஆம்புலன்சில் வீட்டுக்கு கொண்டு செல்லும்போது அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சிகள் ரசிகர்களை கலங்க வைத்துள்ளன.
இதையும் படியுங்கள்... விஜயகாந்த் மறைவு.... தமிழ்நாட்டு திரையரங்குகளில் காட்சிகள் ரத்து