சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் அக்டோபர் 30ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியாக உள்ளது. அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’, இயக்குநர் ஹரியுடன் ‘அருவா’ ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கொரோனா அச்சுறுத்தலால் திரைப்பட படப்பிடிப்புகள் இன்னும் முழுமையாக தொடங்கப்படாத நிலையில் சூர்யா புதிதாக படப்பிடிப்பு எதிலும் கலந்து கொள்ளாமல் வீட்டில் இருப்பதாகவே கூறப்படுகிறது.

தமிழகத்தில் இந்த ஆண்டு நீட் தேர்வு அச்சுறுத்தல் காரணமாக 5 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். அதுவும் நீட் தேர்வுக்கு முன்னதாக ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நீட் தேர்வை வன்மையாக கண்டித்து நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அது சோசியல் மீடியாவில் மட்டுமல்லாது அரசியல் வட்டாரத்திலும் பேசு பொருளாக மாறியது. அதில் சூர்யா வெளியிட்ட அறிக்கை நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இருந்ததாக, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் சென்னை உயர் நீதிமன்றமோ சூர்யா மீது நடவடிக்கை தேவையில்லை எனக்கூறி, சில அறிவுரைகளை வழங்கியது. 

 

இதையும் படிங்க: “அஜித் வீட்டில் இருந்தே வருத்தப்பட்டுக் கொள்ளட்டும்”... செய்தியாளர்கள் சந்திப்பில் கொந்தளித்த எஸ்.பி.பி.சரண்!

இந்நிலையில் ஆழ்வார்பேட்டை சீதாம்மாள் காலனி 2-வது தெருவில் இயங்கி வந்த நடிகர் சூர்யாவின் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர் நேற்று மதியம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் கால் செய்து மிரட்டல் விடுத்தார்.இந்த மிரட்டலை அடுத்து மோப்ப நாய் உதவியுடன் அவரது அலுவலகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்தது.

 

இதையும் படிங்க: படுமோசமான உடையில் பயங்கர கவர்ச்சி காட்டிய பூனம் பஜ்வா... மிரண்டு போன ரசிகர்கள்...!

மேலும் அந்த அலுவலகத்தை சூர்யா 6 மாதத்திற்கு முன்னதாக அடையாறு பகுதிக்கு மாற்றிவிட்டதும் தெரியவந்தது. இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் மரக்காணம் அடுத்துள்ள கூனிமேடுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த புவனேஷ் (20) என்பவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து புவனேஷை சென்னைக்கு அழைத்து வந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சற்று மன நலம் பாதிக்கப்பட்ட புவனேஷ் ஏற்கனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ரஜினிகாந்த், நடிகர் விஜய் ஆகியோர் வீடுகளுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.