“அஜித் வீட்டில் இருந்தே வருத்தப்பட்டுக் கொள்ளட்டும்”... செய்தியாளர்கள் சந்திப்பில் கொந்தளித்த எஸ்.பி.பி.சரண்!
இதையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி.பி.சரண், அஜித் வீட்டில் இருந்தே வருத்தப்படட்டுமே, அவர் நேரில் வந்து அஞ்சலி செலுத்த வேண்டிய அவசியம் இல்லையே.
கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கடந்த மாதம் 5ம் தேதி சென்னையில் இருக்கும் எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த மாதம் 13ம் தேதி அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. அதன் பிறகு தேறி வந்த அவருக்கு கடந்த 4ம் தேதி பரிசோதனை செய்தபோது கொரோனா நெகட்டிவ் என்று தெரிய வந்தது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 1.04 மணிக்கு அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
இதையடுத்து அவருடைய உடல் தாமரைப்பாகத்தில் உள்ள பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அப்போது கடைசி நேரத்தில் தாமரைப்பாக்கம் வீட்டிற்கு வந்த தளபதி விஜய் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின்னர் எஸ்.பி.பி.யின் மகனான எஸ்.பி.பி.சரணையும் கட்டி அணைத்து ஆறுதல் கூறினார். இதுதொடர்பான போட்டோஸ் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் அஜித்தை தனது தெலுங்கு படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மறைவுக்கு அவர் அஞ்சலி செலுத்தது ஏன் என்ற கேள்விகள் எழுந்தது. ஏற்றி விட்டவரையே அஜித் மறந்துவிட்டார் என சோசியல் மீடியாவில் சகட்டு மேனிக்கு விமர்சனங்கள் எழுந்தன.
இதையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி.பி.சரண், அஜித் வீட்டில் இருந்தே வருத்தப்படட்டுமே, அவர் நேரில் வந்து அஞ்சலி செலுத்த வேண்டிய அவசியம் இல்லையே. அஜித்தும் எனக்கு நண்பர் தான், எங்க அப்பாவுக்கும் நல்ல நண்பர் தான். அவர் எங்கிருந்து மரியாதை செலுத்தினால் என்ன இப்போ?. அது ஒரு பிரச்சனையா இப்போது.
அஜித் எனக்கு போன் செய்து துக்கம் விசாரிக்க வேண்டியது ஏன்?. தேவையில்லாமல் ஏன் வதந்தி பரப்புகிறீர்கள். அவர் வந்து வீட்டில் வருத்தப்பட்டு, எனக்கு போன் பண்ணி பேசினால் என்ன, இப்போது இந்த உலகத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இல்லை. என் குடும்பத்திற்கு மிகப்பெரிய இழப்பு. எங்களுக்கு கொஞ்சம் நேரம் தேவை என பதிலளித்தார்.