தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் ராஜமெளலி, மகதீரா, நான் ஈ, பாகுபலி என  இவர் எடுத்த படங்கள் உலக அளவில் பெயர் பெற்றதோடு, வசூலிலும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டடித்தன. டோலிவுட்டின் அசைக்க முடியாத இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள ராஜமெளலி, சுதந்திர போராட்ட வீரர்களை மையப்படுத்திய கதையை படமாக எடுக்க உள்ளார். 

இதையும் படிங்க:  பெரியார் விவகாரம்: மறுக்க வேண்டிய சம்பவம் அல்ல... மறக்க வேண்டிய சம்பவம்... ஆன்மீக அரசியலில் அதிரடி காட்டும் ரஜினி..!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நாயகர்களான ராம் சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் நடித்து வரும் அந்த படத்திற்கு ஆர்.ஆர்.ஆர். என பெயரிடப்பட்டுள்ளது. சூப்பர் ஹீரோக்களை வைத்து மாஸ் இயக்குநர் எடுக்கப்போற படம்னா சும்மாவா?, ஆரம்பத்தில் இருந்தே படத்தின் அப்டேட் பற்றி தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். 

இந்நிலையில் ஆர்.ஆர்.ஆர்.படத்தில் பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான அஜய் தேவ்கன் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் வில்லனாக நடிக்க அஜய் தேவ்கனை அனுகினார். ஆனால் அப்போது கால்ஷீட் பிரச்சனை காரணமாக நோ சொல்லிவிட்டார். 

இதையும் படிங்க:வெறித்தனமா வெளுத்து வாங்கும் அஜித்... லீக்கானது "வலிமை" பைட் சீன் போட்டோ..!

இப்போது பன்மொழி படமாக தயாராகும் ஆர்.ஆர்.ஆர். படத்தில் இன்று முதல் அஜய்தேவ்கன் நடிக்க உள்ளதாக இயக்குநர் ராஜமெளலி தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். சில ஹாலிவுட் நடிகர்களும் நடிக்க உள்ள இந்த படத்தில் அஜய்தேவ்கனுக்கு மிகவும் முக்கியமான கதாபாத்திரம் எனக்கூறப்படுகிறது.