"நேர்கொண்ட பார்வை"  படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அஜித், ஹெச்.வினோத், போனிகபூர் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் "வலிமை". அந்த படத்தில் அதிரடி போலீஸாக நடிக்க உள்ளார் அஜித். இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. 

இதையும் படிங்க: பெரியார் விவகாரம்: மறுக்க வேண்டிய சம்பவம் அல்ல... மறக்க வேண்டிய சம்பவம்... ஆன்மீக அரசியலில் அதிரடி காட்டும் ரஜினி..!

அதில் அனல் பறக்கும் சண்டை காட்சிகளில் தல, டூப் இல்லாமல் நடித்து அசத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. பைட் சீன் செம்ம ரிஸ்காக உள்ளதால் டூப் போட்டுக்கொள்ளலாம் என்று சொல்லியும் அஜித் அதை மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. 

இதையடுத்து அஜித்தின் மாஸ் ஆக்‌ஷன் பிளாக்கை காண தல ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் இருந்தனர். இந்நிலையில் "வலிமை'' படத்தில் அஜித், எதிரிகளுடன் அனல் பறக்க சண்டையிடும் போட்டோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஏற்கனவே ''வலிமை'' படத்தில் அஜித்தின் 2 லுக்குகளும் லீக்கானதில் செம்ம ஆப்செட்டில் இருந்தார் ஹெச்.வினோத். 

இந்த சமயத்தில் முக்கிய சீனான சண்டை காட்சி போட்டோ வெளியானது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் அந்த போட்டோ ''வலிமை'' படத்தின் பைட் சீன் இல்லை என்றும், நேர்கொண்ட பார்வை படத்திற்காக தல பைட் செய்ய ட்ரெயினிங் எடுத்தது என்றும் சோசியல் மீடியாவில் பரவி வருகிறது.