கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!
Pradeep Ranganathan Golden Era 2025 : 2025 ஆம் ஆண்டில் பொற்காலத்தை அனுபவித்த நடிகர் யார் என்று இந்த தொகுப்பில் முழுமையாக பார்க்கலாம்.

பிரதீப் ரங்கநாதன்
தமிழ் சினிமாவைப் பொறுத்த வரையில் மாஸ் நடிகர்களின் படங்கள் திரைக்கு வந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மோசமான தோல்வியை எதிர்கொண்டது. ரஜினிகாந்தின் கூலி, அஜித் குமாரின் குட் பேட் அக்லீ ஆகிய படங்கள் மட்டுமே ஓரளவு பாக்ஸ் ஆபிஸில் வசூல் குவித்தன. மற்ற படங்களான ரெட்ரோ, தக் லைஃப் ஆகிய படங்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தன.
பிரதீப் ரங்கநாதனின் டிராகன் மற்றும் டியூட் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
இதற்கெல்லாம் விதி விலக்காக இருந்த நடிகர் தான் பிரதீப் ரங்கநாதன். 2025 ஆம் ஆண்டை தமிழ் சினிமாவில் 'பிரதீப் ரங்கநாதன் ஆண்டு' என்று அழைப்பது முற்றிலும் பொருந்தும். ஒரு இளம் நடிகர், தமிழ் சினிமாவின் டாப் கியரை அடைந்த ஆண்டு இது. அவரது வெற்றிக்குப் பின்னால் உள்ள காரணங்கள் உண்மையிலேயே ஆச்சரியமானவை: ஒரே ஆண்டில் டிராகன், டியூட் என்று 2 ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவை காப்பாற்றியுள்ளார்.
பிரதீப் ரங்கநாதனின் டிராகன் மற்றும் டியூட்
பிரதீப் ரங்கநாதனின் டிராகன் மற்றும் டியூட் ஆகிய இரண்டு படங்களும் சுமார் நூறு கோடிகளுக்கு மேல் வசூலித்து. அவருக்கு இந்த ஆண்டின் பொற்காலத்தை அமைத்து கொடுத்தன என்று கூறுகின்றன சினிமா வட்டாரங்கள். பிரதீப் ரங்கநாதன் பாக்ஸ் ஆபிஸ் மைல்கல்லை எட்டியுள்ளார்: முன்னணி நடிகராக அவரது முதல் மூன்று படங்களான லவ் டுடே, டிராகன் மற்றும் அவரது சமீபத்திய வெளியீடான டியூட் ஆகியவை உலகளாவிய வசூலில் ரூ. 100 கோடி வசூலைத் தாண்டியுள்ளன .
லவ் டுடே: பிரதீப் ரங்கநாதன்
தமிழ் சினிமாவில் பிரதீப் ரங்கநாதன் முன்னணி நடிகராக அறிமுகமான படம் லவ் டுடே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது, உலகளவில் ரூ. 105 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்தப் படத்தை அவரே நடித்து படத்தையும் அவரே இயக்கினார். ரசிகர்கள் இடையே இந்த கதை ஒரு புதுவிதமான கதையாக இருந்தது. இந்த படம் மிகவும் சொல்லப்போனால் அவர்கள் பாணியிலேயே உள்ளது என்பதை ரசிகர் வட்டாரங்கள் தெரிவித்தனர்.
பிரதீப் ரங்கநாதன் கோலிவுட்டின் இளவரசன்
காதலர்கள் இரண்டு பேருமே அவர்களுக்கு போனை ஒரு நாள் முழுவதும் ஒருவர் கூறுவர் மாற்றிக்கொள்வதே இந்த படத்தின் மிகச் சிறப்பு கதையாக கூறப்படுகிறது இதன் மூலம் ரசிகர்களின் அவர்கள் கூட ஒரு உண்மை சம்பவம் ஆகவே இருந்தது என்பதை போலவே அனைவராலும் கூறப்பட்டது பிரதீப் ரங்கநாதனின் சினிமா பயணத்தில் இப்படம் பிரதீப் ரங்கராஜனுக்கு இது முதல் படம் அதுவே அவருக்கு ஒரு பெரிய வெற்றி படமாகவே அவருக்கு அமைத்து தந்தது இதன் மூலம் இவர் படம் எடுத்தால் அது நன்றாக இருக்கும் என்று ரசிகர்களால் நம்ப வைக்கப்பட்டார்.
டியூட்: தமிழ் சினிமா
தமிழ் சினிமாவில் தீபாவளி ஒட்டி பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜுவின் டியூட் திரைப்படம் உலகளவில் நல்ல வசூலை ஈட்டி தனது பாக்ஸ் ஆபிஸ் வசூலை முடித்துள்ளது. தமிழ் சினிமாவில் காதல் நகைச்சுவையுடன் கடந்த படமாக இந்த படம் அக்டோபர் மாதம் வெளிவந்தது. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று பிரதிஷ்ட ரங்கநாதன் படம் என்றாலே அது நான் சூப்பராக இருக்கும் என்று ரசிகர்களுக்கு இடையே நல்ல பேச்சு வார்த்தையும் மனதில் வரவேற்பையும் பெற்று வந்த நிலையில் அசால்டாக 100 கோடியை வசூலித்து பாக்ஸ் ஆபீஸ் மைல்கல்லாக இது தன்னுடைய இடத்தை பதித்தது.
டியூட் பிரதீப் ரங்கநாதன்
டியூட் திரைப்படம் அவரும் அவர் நடித்து வெளிவந்த முதல் திரைப்படம் ஆன லவ் டுடே படத்தை விட அதிக அளவில் வசூலித்து லவ் டுடே முறியடித்தது திரைப்படம். க்யூட் சிறப்பறத்தை கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் வெளிவந்தது.நவீன் யெர்னேனி தயாரித்தார்.சாய் அபயங்கர் படத்திற்கு இசையமைத்து உள்ளார்.
டிராகன்: பிரதீப் ரங்கநாதன்
பிரதீப் ரங்கநாதன் இயக்கிய தமிழ் திரைப்படமான டிராகன் (2025), உலகளவில் ரூ. 150 கோடியைத் தாண்டி, இந்தியாவில் சுமார் ரூ. 100கோடி மற்றும் தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க வசூலை ரூ. 82.5 கோடி ரூபாய் ஈட்டி, மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றியைப் பெற்றது, 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் 100 கோடி நிகர வசூலை எட்டிய முதல் கோலிவுட் படமாகவும், இந்த படம் இருந்தது ரசிகர்களுக்கு இடையே பெரும் வரவேற்பை பெற்று வந்தது. விடாமுயற்சியை வீழ்த்தியது: அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி படம் டிராகன் படத்துடன் மோதி வீழ்ச்சியை கண்டது டிராகன் வெற்றியை மதித்தது பாக்ஸ் ஆபிஸில் இடம் பெற்றது. விடாமுயர்ச்சியின் வசூலை விஞ்சியதாகவும் அமைந்தது. இதன் உலகளாவிய வசூல் தோராயமாக ரூ.153.82 கோடி வரை, இது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
டிராகன் இயக்குனர்: அஸ்வத் மாரிமுத்து
இயக்குனர்:
இந்த படம் அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ளார். காதல் மற்றும் நகைச்சுவையுடன் கூடிய இந்த திரைப்படம் ஒரு சராசரி மனிதன் வாழ்க்கையில் என்னவெல்லாம் செய்கின்றான் என்பதே இந்த படத்தின் முக்கிய கதைகளாக இருந்தது இப்படத்தில் அனுபவமா ஹீரோயினியாக நடித்துள்ளார் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர்:
லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார் இதில் ஒவ்வொரு பாட்டும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது. டிராகன் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து தமிழ் சினிமாவில் பிளாக் போஸ்டர் என்னும் இடத்தை பெற்றுள்ளது. விடாமுயற்சி படத்தோடு இப்படமும் திரைக்கு வந்து பிளாக்பஸ்டர் அசால்டாக தட்டி சென்றது என்றே கூறலாம். அது 100 கோடிக்கு அதிகமாக இப்படம் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.