இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640 ஆக அதிகரித்துள்ளது. சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆனால் அரசிற்கு கொரோனா தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கான இடவசதி போதுமான அளவு இல்லை. அதனால் தன்னார்வலர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டு நிறுவனங்கள் என பலரும் தங்களுக்கு சொந்தமான இடங்களை அரசுக்கு வழங்கி வருகின்றனர். இந்தியாவை பொறுத்தவரை கொரோனா தொற்று அதிகமுள்ள மகாராஷ்டிரா மாநிலத்திற்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் உதவி வருகின்றனர். 

முதலில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனக்கு சொந்தமான 4 மாடி கட்டிடத்தை கொரோனா தனிமைப்படுத்தல் சிகிச்சைக்காக பயன்படுத்திக்கொள்ளும் படி மும்பை மாநகராட்சிக்கு அனுமதி அளித்தார். இதையடுத்து பாலிவுட் திரையுலகின் பிரபல வில்லன் நடிகரான சோனு சூட், தனக்கு சொந்தமான ஓட்டலை மருத்துவ ஊழியர்கள் ஓய்வெடுக்க பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவித்தார். 

இதையும் படிங்க: நயன்தாரா என்ன யோக்கியமா..? வாண்டடாக வம்பிழுக்கும் சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி...!

கண்ணுக்கு தெரியாத கொடிய அரக்கனான கொரோனா வைரஸிற்கு எதிராக மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் மட்டுமின்றி காவல்துறையினரும் இரவு, பகல் பாராமல் போராடி வருகின்றனர். ஊரடங்கு காலத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கவும், சட்டம் ஒழுங்கை காக்கவும் தங்களது உயிரை பணயம் வைத்து காவல்துறையினர் பணியாற்றி வருகின்றனர். 

இதையும் படிங்க: ‘ஓ போடு’ பாட்டுக்கு ஓவர் கிளாமர் டிரஸில் டிக்-டாக்... ஊரடங்கிலும் கிளுகிளுப்பை கூட்டும் கிரண்...!

லாக்டவுன் நேரத்தில் மக்களுக்காக சேவையாற்றும் காவல்துறையினருக்கு பாலிவுட் இயக்குநர் ரோஹித் ஷெட்டி உதவிக்கரம் நீட்டியுள்ளார். அவருக்கு தனக்கு சொந்தமான 8 ஓட்டல்களை போலீசார் ஓய்வெடுத்துக்கொள்ள பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார். அத்துடன் 3 வேளை உணவிற்கும் ஏற்பாடு செய்துள்ளார். ரோஹித் ஷெட்டியின் இந்த உதவிக்கு மும்பை காவல்துறையினர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளனர்.