விரைவில் தாயாகவிருக்கும் இலியானா.. காதல் கணவர் குறித்து கொடுத்த Hint - அவர் யார் தெரியுமா?
பல மாத காலமாக கிசுகிசுக்கப்பட்ட அந்த லண்டன் மாடல் தான் இலியானாவின் காதலர், இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்ட தகவல்களும் அதேயே கூறுகின்றது.

இன்று பாலிவுட் உலகையே ஒரு கலக்கு கலக்கி வரும் பல முன்னணி நடிகைகள், தங்களது திரைப்பட வாழ்க்கையை தமிழில் இருந்து தான் துவங்கினார்கள். அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகை இலியானாவும் "கேடி" என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தான் புகழ் பெற்றார். அதன் பிறகு தொடர்ச்சியாக தெலுங்கு, கன்னடம், மற்றும் ஹிந்தியில் பல திரைப்படங்களில் இவர் நடித்து வருகிறார்.
கேடி மற்றும் தளபதி விஜய் நடிப்பில் வெளியான நண்பன் ஆகிய இரு தமிழ் படங்களை தவிர இவர் வேறு தமிழ் திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் இவருக்கு தமிழிலும் ரசிகர்கள் அதிகம். இறுதியாக அபிஷேக் பச்சன் நடிப்பில் வெளியான "பிக் புல்" என்ற திரைப்படத்தில் கடந்த 2021ம் ஆண்டு நடித்த இலியானா அதன் பிறகு பெரிய அளவில் படங்களில் நடிக்காமல் இருந்தார்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அவர் தான் கருவுற்று இருப்பதை அறிவித்து, தனது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். ஆனால் அந்த குழந்தையின் தந்தை குறித்தும் தனது காதல் கணவர் குறித்தும் அவர் எதுவும் பேசாமல் இருந்தார். இந்நிலையில் அவர் அவ்வப்போது வெளியிடுகிற இன்ஸ்டாகிராம் பதிவுகள், இலியானாவின் காதல் கணவர் யார் என்பதை வெளிக்காட்டும் விதமாக உள்ளது.
இதையும் படியுங்கள் : ஆர்யா முதல் சூரி வரை.. ஓட்டல் பிசினஸில் கல்லா கட்டும் பிரபலங்கள்!
ஏற்கனவே பாலிவுட் வட்டாரம் முணுமுணுத்த பிரபல லண்டன் மாடல் செபாஸ்டின் லோரன்ட் மைக்கில் தான் இலியானாவின் காதலர் என்று கூறப்படுகிறது. இவர் லண்டனை சேர்ந்த பிரபல மாடல் நடிகர் மட்டுமல்ல, இவர் பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்பின் அண்ணன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மாலத்தீவில் கத்ரீனா மட்டும் செபாஸ்டின் தங்கள் குடும்பத்தினருடன் ஒன்றிணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களும், மும்பை விமான நிலையத்தில் இவர்கள் இருவரும் ஜோடியாக வலம் வந்ததையும் வைத்து இலியானா, செபாஸ்டின் மீது தான் காதல் கொண்டுள்ளார் என்று பரவிய கிசுகிசுக்கள் தற்போது உண்மையாகியுள்ளது.
இதையும் படியுங்கள் : பெரும் தொகை.. ஜவான் படத்தின் ரிலீஸ் உரிமையை தட்டிதூக்கிய ரெட் ஜெயண்ட்