MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஆர்யா முதல் சூரி வரை.. கமகமவென சாப்பாடு போட்டு ஓட்டல் பிசினஸில் கல்லா கட்டும் சினிமா பிரபலங்கள் பற்றி தெரியுமா

ஆர்யா முதல் சூரி வரை.. கமகமவென சாப்பாடு போட்டு ஓட்டல் பிசினஸில் கல்லா கட்டும் சினிமா பிரபலங்கள் பற்றி தெரியுமா

ஓட்டல் பிசினஸ் செய்து நன்கு லாபம் பார்த்து வரும் தமிழ் சினிமா நடிகர், நடிகைகள் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம். 

2 Min read
Author : Ganesh A
Published : Jul 07 2023, 02:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

சினிமாவில் கோடி கோடியாய் சம்பாதிக்கும் நடிகர், நடிகைகள் அந்த பணத்தை பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து வருகின்றனர். அந்த வகையில், நயன்தாரா, விஜய், சமந்தா, அஜித் போன்ற டாப் நடிகர், நடிகைகள் ஏராளமான பிசினஸ் செய்து சம்பாதித்து வருகின்றனர். அந்த வகையில் ஓட்டல் பிசினஸ் நடத்தி அதன் மூலம் பெத்த லாபம் பார்த்து வரும் தமிழ் சினிமா நடிகர், நடிகைகளை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

27
சூரி

சூரி

தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி நடித்து வரும் சூரி, மதுரையில் ஓட்டல் பிசினஸ் செய்து வருகிறார். இவர் மதுரையில் அம்மன் மெஸ் என்கிற சைவ உணவகத்தை நடத்தி வருகிறார். இவர்களுக்கு மதுரையில் ஏராளமான கிளைகளும் உள்ளன. இந்த பிசினஸை சூரியின் குடும்பத்தினர் தான் கவனித்து வருகிறார்கள்.

37
ஆர்யா

ஆர்யா

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவருக்கும் சொந்தமாக ஹோட்டல் உள்ளது. அதன்படி ஷீ ஷெல் என்கிற ஹோட்டலை தான் ஆர்யா நடத்தி வருகிறார். சென்னையில் வேளச்சேரி மற்றும் அண்ணாநகர் ஆகிய இடங்களில் ஆர்யாவின் ஓட்டல் செயல்பட்டு வருகிறது.

47
கருணாஸ்

கருணாஸ்

நகைச்சுவை நடிகரும், அரசியல்வாதியுமான கருணாஸ், சொந்தமாக உணவகம் ஒன்றையும் வைத்துள்ளார். இவரது மனைவி கிரேஸ், நன்கு சமைக்க தெரிந்தவர். அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்று அசத்தினார். கருணாஸ் சென்னை சாலிகிராமத்தில் நடத்தி வரும் ஓட்டலை கிரேஸ் தான் கவனித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்... பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் ஹீரோயினை களமிறக்கிய விக்னேஷ் சிவன் - இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

57
ஜீவா

ஜீவா

நடிகர் ஜீவா தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரியின் மகன் என்பது அனைவரும் அறிந்ததே. இவரும் சென்னையில் சொந்தமாக ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். ஒன் எம்பி என்ற பெயர் கொண்ட அந்த ரெஸ்டாரண்ட் தி நகரில் செயல்பட்டு வருகிறது. அந்த ரெஸ்டாரண்டை அவரது மனைவி தான் நிர்வகித்து வருகிறார்.

67
ஆர்.கே.சுரேஷ்

ஆர்.கே.சுரேஷ்

தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக அறிமுகமாகி பல படங்களை தயாரித்தவர் ஆர்.கே.சுரேஷ். இவர் பாலா இயக்கிய தாரை தப்பட்டை படம் மூலம் வில்லனாக அறிமுகமாகி பல்வேறு படங்களில் வில்லனாக மிரட்டினார். இவரும் சொந்தமாக ஓட்டல் நடத்தி வருகிறார். சாப்பிடலாம் வாங்க என்கிற பெயர் கொண்ட இந்த ஓட்டல் கேகே நகரில் செயல்பட்டு வருகிறது.

77
பிரியா பவானி சங்கர்

பிரியா பவானி சங்கர்

கோலிவுட்டில் பிசியான நாயகியாக வலம் வருபவர் தான் பிரியா பவானி சங்கர். இவரும் அண்மையில் ஓட்டல் பிசினஸில் காலடி எடுத்து வைத்தார். இவர் லையம்ஸ் டின்னர் என்கிற ஓட்டலை இந்த ஆண்டு தான் தொடங்கினார். இந்த ஓட்டல் சென்னை மாம்பாக்கம் பகுதியில் இயங்கி வருகின்றது.

இதையும் படியுங்கள்... ஸ்ருதிஹாசனே நல்லா தான இருக்கு... ஆனா மகளை செல்லமாக ஆம்பள பெயர் சொல்லி தான் அழைப்பாராம் கமல் - ஏன் தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஆர்யா
சூரி (நடிகர்)
உணவு விடுதி வணிகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மரண பயத்தை காட்டிய சிந்தாமணி... நாமினேஷன் வாபஸ் வாங்கும் முடிவில் மீனா..! சிறகடிக்க ஆசை அப்டேட்
Recommended image2
Now Playing
கயல் சீரியல் நடிகையின் உயிரைப் பறித்த வீடியோ கால்... அதிர்ச்சியில் ரசிகர்கள்
Recommended image3
Now Playing
ராஷ்மிகா மந்தனா கர்ப்பமா? இன்ஸ்டாகிராம் பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்: உண்மை என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved