பெரும் தொகை கொடுத்து ஜவான் படத்தின் ரிலீஸ் உரிமையை தட்டிதூக்கிய ரெட் ஜெயண்ட்
ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ஜவான் திரைப்படத்தின் ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
பதான் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ஜவான். இப்படத்தை அட்லீ இயக்கி உள்ளார். இதன்மூலம் அவர் பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். இதில் முதன்முறையாக ஷாருக்கானுக்கு ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். மேலும் வில்லனாக விஜய் சேதுபதியும், காமெடியனாக யோகிபாபுவும் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார்.
ஜவான் திரைப்படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தான் தயாரித்துள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வருகிற செப்டம்பர் மாதம் 7-ந் தேதி ஜவான் திரைப்படம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரண்டு மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், அப்படத்திற்கான பிசினஸும் தற்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
இதையும் படியுங்கள்... ஆர்யா முதல் சூரி வரை.. கமகமவென சாப்பாடு போட்டு ஓட்டல் பிசினஸில் கல்லா கட்டும் சினிமா பிரபலங்கள் பற்றி தெரியுமா
அதன்படி ஜவான் படத்தின் டிஜிட்டல், ஓடிடி, சாட்டிலைட் மற்றும் இசை உரிமை ஆகியவை மட்டும் ரூ.250 கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது. இதுதவிர இப்படத்தின் திரையரங்க உரிமைகளும் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்படத்தின் தமிழக திரையரங்க உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் கைப்பற்றி உள்ளதாம். பெரும் தொகை கொடுத்து இதன் உரிமையை கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழில் வெளியாகும் பாலிவுட் படத்திற்கு இதுவரை இல்லாத அளவுக்கு அதிக தொகை கொடுத்து ஜவான் படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வாங்கி உள்ளதற்கு காரணம், அதில் பணியாற்றியுள்ள ஏராளமானோர் தமிழ் சினிமாவை சேர்ந்தவர்கள். இதனால் இப்படத்திற்கு தமிழிலும் அதிகளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதேபோல் ஜவான் படத்தின் தெலுங்கு திரையரங்க உரிமையை தில் ராஜு தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் ஹீரோயினை களமிறக்கிய விக்னேஷ் சிவன் - இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!