காதலிக்க மறுக்கும் பெண்களுக்கு அவர்களை விரும்பிய சில இளைஞர்கள் தரும் கொடூரமான நினைவு பரிசு முகத்தில் ஆசிட் வீசுவது. அப்படி ஆசிட் வீச்சுக்கு ஆளான  பெரும்பாலான பெண்கள் வீட்டில் ஒரு மூலையில் முடங்கி  விடுவார்கள். தங்களது முகத்தை வெளி உலகிற்கு காட்ட அஞ்சும் பெண்களுக்கு மத்தியில், ஆசிட் வீச்சை எதிர்த்து வாழ்வில் வெற்றி கண்ட வீரமங்கை லக்‌ஷ்மி. அவரது உண்மை கதையை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் படம் "சப்பாக்". அதில் தீபிகா படுகோன் லஷ்மி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேக்னா குல்சார் இயக்கும் இந்த படத்தில் தீபிகா படுகோன் இணை தயாரிப்பாளராகவும் சேர்ந்துள்ளார். 

கடந்த 10ம் தேதி "சப்பாக்" படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா  மும்பையில் நடைபெற்றது. முதலில் பார்வையாளர்களுக்காக திரையிடப்பட்ட ட்ரெய்லர் சோசியல் மீடியாவிலும் வெளியாகி வைரலாகி வருகிறது. ஒருசில நடிகைகள் இந்த வேடத்தை நிராகரித்ததாக கூறப்படும் நிலையில், தீபிகா தான் யாரென்ற அடையாளமே தெரியாத அளவிற்கு பக்காவாக மேக்கப் போட்டு நடித்துள்ளார்.

ட்ரெய்லரைப் பார்த்த ரசிகர்கள் மட்டுமல்லாது பாலிவுட் பிரபலங்கள் பலரும், தீபிகாவை பாராட்டு வருகின்றனர். இந்நிலையில் சப்பாக் டிரெய்லர் வெளியீட்டு விழா மேடையில் தீபிகா படுகோன் கதறி அழும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

 

ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகை தீபிகா படுகோன் உள்ளிட்ட படக்குழுவினருக்காக மீண்டும் ஒரு முறை ட்ரெய்லர் போட்டு காண்பிக்கப்பட்டது. அதனை முதன் முறையாக பார்த்த தீபிகா கதறி அழ ஆரம்பித்தார். மேலும் மேடைக்கு பேச மட்டுமே தன்னை அழைத்ததாகவும், ட்ரெய்லர் ஒளிபரப்பப்படும் என்பது எனக்கு தெரியாது. அதனால் தான் எமோஷன் ஆகிவிட்டேன் என்றும் விளக்கினார். அச்சு அசலாக லஷ்க்மி போலவே உருமாறியுள்ள தீபிகா, முதன் முறையாக ட்ரெய்லரை பார்த்ததால் உணர்ச்சிவசப்பட்டதாக படக்குழுவினர் விளக்கம் அளித்தனர். இந்நிலையில் சப்பாக் பட ட்ரெய்லர்  வெளியீட்டு நிகழ்ச்சி வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.