இந்த சமயத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிரபல பாலிவுட் நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் தலைவிரித்தாடிய கொரோனா தொற்று தற்போது மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதனால் கடும் முடக்கத்தில் சிக்கித் தவித்த திரையுலகம் சற்றே நிம்மதி பெருமூச்சு விட்டு படப்பிடிப்பில் பங்கேற்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் படப்பிடிப்பில் பங்கேற்ற மலையாள நடிகர் ப்ரித்விராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த செய்தி திரையுலகினர் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதையும் படிங்க: பாகுபலியையே பந்தாடிய சூர்யா... “சூரரைப் போற்று” வசூல் எத்தனை கோடி தெரியுமா?
அதன் பின்னர் வெப் சீரிஸ் படப்பிடிப்பில் பங்கேற்ற தமன்னாவிற்கும் தொற்று உறுதியானது. இடையில் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு கொரோனா பாசிட்டிவ் எனக்கூறப்பட்ட நிலையில், பரிசோதனை முடிவுகள் தவறாக வந்துவிட்டதாகவும், தனக்கு கொரோனா இல்லை என்றும் விளக்கமளித்தார். இதனால் பிரபலங்கள் பலரும் ஷூட்டிங்கில் பங்கேற்க தயங்கி வருகின்றனர்.
இந்த சமயத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிரபல பாலிவுட் நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் நடிகரான சன்னி தியோலுக்கு சமீபத்தில் தோள் பட்டை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து ஓய்வு எடுப்பதற்காக மணாலி சென்ற அவருக்கு, லேசான காய்ச்சல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: “ராஜா ராணி” கெட்டப்பில் தல அஜித் - ஷாலினி... தாறுமாறு வைரலாகும் ஸ்டைலிஷ் போட்டோஸ்...!
இதையடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொண்ட சன்னி தியோலுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்ட சன்னி தியோல், கொரோனா தாக்கத்தில் இருந்து மீண்ட பிறகே மும்பை திரும்புவேன் என தெரிவித்துள்ளார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 3, 2020, 7:19 PM IST