- Home
- Cinema
- தொலைக்காட்சி
- கார்த்திக்-ரேவதி உறவை முடிவுக்குக் கொண்டு வர... பஞ்சாயத்தைக் கூட்டிய சாமுண்டீஸ்வரி: அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்!
கார்த்திக்-ரேவதி உறவை முடிவுக்குக் கொண்டு வர... பஞ்சாயத்தைக் கூட்டிய சாமுண்டீஸ்வரி: அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்!
Chamundeshwari Breaks Karthik Revathi Relationship : கார்த்திகை தீபம் சீரியலில் ரசிகர்களுக்கு பிடித்த கார்த்திக் மற்றும் ரேவதி திருமண உறவை வெட்டிவிட சாமுண்டீஸ்வரி பஞ்சாயத்தை கூட்டியது அனைவரையும் அடையச் செய்துள்ளது.

Karthigai Deepam Serial Today 1061 Episode Highlights
கார்ர்த்திகை தீபம் சீரியலில் கடந்த வாரம் நடந்த எபிசோடுகளின்படி சந்திரகலா தனக்கு தானே கத்தியால் குத்திக் கொண்டு கார்த்திக் தான் செய்தார் என்று அவரை மாட்டிவிட்டார். கார்த்திக் மீது கடும் கோபத்தில் இருக்கும் சாமுண்டீஸ்வரியும் கார்த்திக் மீது போலீசில் புகார் கொடுக்க அவர கைது செய்யப்பட்டார்.
Karthik and Revathi Separation in Karthigai Deepam
ஏற்கனவே கார்த்திக் மீது கோபத்தில் இருக்கும் இன்ஸ்பெக்டர் அவரை போட்டுத்தள்ள பிளான் போடுகிறார். இதற்கிடையில் கார்த்திக் மற்றும் ரேவதியின் உறவை முறிக்க சந்திரகலா ஐடியா கொடுக்க சாமுண்டீஸ்வரி பஞ்சாயத்தை கூட்டினார். கோர்ட் கேஸ் என்று விவாகரத்துக்கு சென்றால் லேட் ஆகும் என்று இப்போது பஞ்சாயத்தை கூட்டிவிட்டார். அதில் ரேவதிக்கும், கார்த்திக்குமான உறவை வெட்டிவிட வேண்டும் என்று பஞ்சாயத்தில் சொல்லவே பரமேஸ்வரி அதிர்ச்சி அடைந்தார். அதோடு ரேவதி இதற்கெல்லாம் சம்மதிக்க மாட்டார் என்றார்.
Karthigai Deepam Serial Today Episode Highlights
இதைத் தொடர்ந்து நீங்கள் ரேவதியிடம் தான் கேட்கவேண்டும் என்று சொல்ல சாமுண்டீஸ்வரி ரேவதியை கூப்பிட வந்தார். ஏற்கனவே தனது கணவரை போலீஸ் ஸ்டேஷனில் வைத்து போட்டு தள்ளா போறாங்க என்பதை கான்ஸ்டபிள் மூலமாக ரேவதி தெரிந்து கொண்டிருந்தார். இதன் காரணமாக தனது அம்மா விவாகரத்து பற்றி சொல்லவே சம்மதம் தெரிவித்தார். ஆனால், அதற்கு ஒரு கண்டிஷன். கார்த்திக் மீதான புகாரை வாபஸ் பெற வேண்டும் என்றார்.
Karthigai Deepam Serial Update
அதற்கு சாமுண்டீஸ்வரி முடியாது என்று சொல்ல, சந்திரகலா அக்கா சரி என்றூ சொல். நமக்கு ரேவதி மற்றும் கார்த்திக் இருவரும் பிரிந்தால் போதும் என்று சொல்லவே சாமுண்டீஸ்வரியும் சம்மதம் தெரிவித்தார்.
இது ஒருபுறம் இருக்க கார்த்திக்கிற்கு வாங்கி வந்த சாப்பாட்டில் இன்ஸ்பெக்டர் விஷத்தை கலந்து கொடுத்தார். ஆனால், அதை சாப்பிடவா வேண்டாமா என்று கார்த்திக் யோசனையில் இருக்கும் போது சாமுண்டீஸ்வரி ஸ்டேஷனுக்கு வந்த கேஸை வாபஸ் பெற வேண்டும் என்றார். அதோடு இந்த எபிசோடு முடிந்தது.
Chamundeshwari Breaks Relation
ஏற்கனவே கார்த்திக் மற்றும் ரேவதி இருவரும் தனித்தனியாக இருப்பது குறித்து ரசிகர்கள் பலரும் விமர்சனம் செய்து வந்தனர். இந்த நிலையில் இப்போது இருவரும் பிரிவதால் யாரும் சீரியலை பார்க்க விரும்பமாட்டார்கள். அப்படி இருக்கும் போது உண்மையில் கார்த்திக் மற்றும் ரேவதி பிரிவார்களா அல்லது சீரியலில் ஏதேனும் டுவிஸ்ட் இருக்குமா என்பது பற்றி பொறுத்திருந்து பார்க்கலாம்.
Karthik Revathi Separation Twist
கார்த்திக் தீபம் சீரியலின் முதல் சிசனில் கார்த்திக் மற்றும் தீபா இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர். ஒரே ஆபிஸிலும் வேலை பார்த்தனர். இதனால், அவர்களுக்கிடையிலான காதல், ரொமான்ஸ் காட்சிகள், புரிதல் என்றூ எல்லாமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. டிஆர்பிலும் டாப்பில் இருந்தது. ஆனால், தற்போது ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலின் டிஆர்பியைப் பொறுத்த வரையில் இன்னும் டாப்பில் வரவே இல்லை. கடந்த சனிக்கிழமையன்று டிஆர்பி ரேட்டிங்கில் 4.42 புள்ளிகள் பெற்றிருந்த இந்த சீரியல் அடுத்தடுத்து 5.14, 5.70, 5,59, 5,58, 5,72 என்று புள்ளிகள் பெற்றது. சராசரியாக 5.36 மட்டுமே பெற்றிருந்தது.
Karthigai Deepam Chamundeshwari Panchayat
டாப் 10 ரேட்டிங்கின் அடிப்படையில் கார்த்திகை தீபம் சீரியல் இன்னும் டாப் இடத்தை கூட பிடிக்கவில்லை. நாளுக்கு நாள் ரசிகர்களிடையே எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஒருவேளை கார்த்திக் மற்றும் ரேவதி பிரிந்தால் ரேவதி அவரது அம்மா வீட்டில் இருக்க விரும்பமாட்டார் என்றும், பாட்டியுடன் அவரது வீட்டில் இருக்க விரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. என்ன நடக்கிறது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்த்து தெரிந்து கொள்வோம்.