விருது

புகழ்பெற்ற பாலிவுட் நடிகர் இர்பான் கான் முதலில் தொலைக்காட்சி தொடர்களில் தான் முதலில் நடிக்க ஆரம்பித்தார்.அதன் பிறகு படிப்படியாக உயர்ந்து பாலிவுட் படங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் எண்ணற்ற பல விருதுகளை பெற்றிருக்கிறார்.

ஹாலிவுட்

மேலும் ஹாலிவுட் திரைப்படங்களான ஸ்லம் டாக் மில்லியனர், ஜூராசிக் வேர்ல்ட், லைஃப் ஆஃப் பை போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர். இந்நிலையில் தனக்கு அரிய வகை நோய் வந்திருப்பதாக இர்பான் தமது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அரிய வகை நோய்

கடந்த 15 நாட்களாக உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ள அவர் தனக்கு அரிய வகை நோய் வந்திருப்பதாகவும் அது உறுதியானதும் நானே ஒரு வாரம் கழித்து அறிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.