பாலிவுட் நடிகர் சுஷாந்தின் மரணம், பாலிவுட் மாஃபியா, போதைப்பொருள் புழக்கம் என அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டு வரும் கங்கனாவிற்கும், மகாராஷ்ட்ராவின் ஆளும் கட்சியான சிவசேனாவிற்கு மோதல் போக்கு முற்றி வருகிறது. இதன் உச்சமாக மும்பையின் புறநகர் பகுதியான பாந்த்ராவில் உள்ள பாலிஹில்லில் கங்கனா ரணாவத்தின் அலுவலக கட்டிடம் இடிக்கப்பட்டது. 

 

இதையும் படிங்க: மனைவியை நம்பி மோசம் போன விஜய்... 15 வருஷத்துக்கு முன்னாடி சேர்த்த சொத்துக்கு ஆப்பு...!

விதிகளை மீறி கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி நடவடிக்கையை ஆரம்பிக்க, மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் கங்கனா ரணாவத். அதை விசாரித்த நீதிமன்றமும் கங்கனாவின் கட்டிடத்தின் மீது கைவைக்க இடைக்கால தடை விதித்தது. மேலும் தனக்கு 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு கங்கனா தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இழப்பீடு அளிக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருந்தது. 

 

இதையும் படிங்க: ஹீரோயின் வாய்ப்பு கிடைத்ததால் இப்படியா?... இடை தெரிய உடையணிந்து அதிர்ச்சி கொடுத்த அனிகா...!

ஆனால் கங்கனாவின் இந்த வெற்றியை ஏற்றுக்கொள்ளாத மும்பை மாநகராட்சி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்யலாம் என்ற தகவல் கங்கனாவின் காதுகளை எட்டியுள்ளது. இதனால் உஷாரான கங்கனா ரணாவத் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், அலுவலக கட்டிடம் இடிப்பு தொடர்பாக மாநகராட்சி வழக்கு தொடரும் பட்சத்தில் தனது கருத்துக்களை கேட்காமல் எந்த முடிவையும் எடுக்க கூடாதென குறிப்பிட்டுள்ளார்.