மனைவியை நம்பி மோசம் போன விஜய்... 15 வருஷத்துக்கு முன்னாடி சேர்த்த சொத்துக்கு ஆப்பு...!
விஜய் மனைவி சங்கீதா இலங்கை தமிழர் என்பதும், அவரை விஜய் காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதும் அனைவரும் அறிந்த செய்தி.
நடிகர் விஜய் மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் நெய்வேலி என்.எல்.சி.யில் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அங்கு தடாலடியாக நுழைந்த வருமான வரித்துறையினர் விஜய்யிடம் விசாரணை நடத்தியதை யாராலும் மறந்திருக்க முடியாது.
அங்கிருந்து விஜய்யை சென்னை அழைத்து வந்து அவருக்கு சொந்தமான இடங்களில் தீவிர சோதனை செய்தனர். ஆனால் அப்போது விஜய் வீட்டிலிருந்து எவ்வித ஆவணங்களுக்கும் சிக்கவில்லை எனக்கூறப்பட்டது.
ஆனால் மனைவி சங்கீதாவின் அப்பாவும், விஜய்யின் மாமனாருமான சொர்ணலிங்கம் வசிக்கும் லண்டனில் கோடிகளைக் கொட்டி விஜய் சொத்து வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனால் விஜய்க்கு அவர் மாமனார் பினாமியாக செயல்படுவதாகவும் கூறப்பட்டது. அப்போது அவை எல்லாம் பொய், வதந்தி என்று கூறப்பட்டாலும் தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் சற்றே சந்தேகத்தை கிளம்பும் விதமாக அமைந்துள்ளது.
அதாவது விஜய் மனைவி சங்கீதா இலங்கை தமிழர் என்பதும், அவரை விஜய் காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதும் அனைவரும் அறிந்த செய்தி.
விஜய் 15 வருடத்திற்கு முன்பு தனது மனைவியான சங்கீதாவை நம்பி அவருடைய உறவினர்கள் பெயரில் கொழும்பு மற்றும் இலங்கையில் கோடிக்கணக்கிலான சொத்துக்களை சேர்த்து வைத்துள்ளார்.
தற்போது அந்த சொத்துக்களை சிங்கள முதலாளிகள் சிலர் கைப்பற்ற முயல்வதாக நடிகர் விஜய் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.