- Home
- Cinema
- தொலைக்காட்சி
- போலீஸ் விசாரணையில் விசாலாட்சி கொடுத்த ட்விஸ்ட்... கொற்றவையிடம் என்ன சொன்னார்? எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
போலீஸ் விசாரணையில் விசாலாட்சி கொடுத்த ட்விஸ்ட்... கொற்றவையிடம் என்ன சொன்னார்? எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரனுக்கு எதிராக விசாலாட்சி வாக்குமூலம் கொடுத்தாரா? இல்லையா? என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu Serial Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் செய்த அட்டூழியங்களை எல்லாம் ஜட்ஜ் ஒருவரிடம் ஜனனி சொன்னதை அடுத்து, அவர் மீது அதிரடி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது. ஆதி குணசேகரனை குண்டாஸில் கைது செய்ய அய்யாதுரை பாண்டியன் என்கிற நேர்மையான போலீஸ் அதிகாரி தலைமையில் ஒரு சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த கொற்றவையும் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில், வீட்டில் உள்ள பெண்களிடம் வாக்குமூலம் பெற கொற்றவை வந்திருக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
ஹிண்ட் கொடுத்த கொற்றவை
விசாரணைக்கு முன்பே ஜனனியிடம் போன் போட்டு பேசிய கொற்றவை, நமக்கு வாக்குமூலம் ஸ்ட்ராங் ஆக இருந்தால் தான் ஆதி குணசேகரனுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க முடியும், அதற்காக ஆதி குணசேகரன் தரப்பில் இருந்து ஒருவர் வாக்குமூலம் அளிக்க வேண்டும் என கொற்றவை சொல்ல, அதற்கு ஜனனி, இப்போ விசாலாட்சிக்கு எல்லா உண்மையும் தெரிந்துவிட்டதாகவும், அவர் நம்ம பக்கம் தான் இருக்கிறார் என்றும் கூறுகிறார். இதையடுத்து விசாலாட்சியிடம் சென்று, நீங்கள் உங்கள் மகனுக்கு எதிராக சாட்சி சொல்ல வேண்டும் என்று கேட்க, அதற்கு அவர் மெளனமாக கீழே இறங்கி செல்கிறார்.
விசாரணைக்கு வந்த போலீஸ்
பின்னர் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுக்கும் கொற்றவையிடம் அறிவுக்கரசி வம்பிழுக்க, அவருக்கு ஒரு அடி கொடுத்துவிட்டு உள்ளே சென்று அங்கிருக்கும் பெண்களிடம் தான் விசாரிக்க வந்திருப்பதாகவும், நீங்கள் நடந்த உண்மையை ஒளிவு மறைவின்றி சொன்னால் தான் எங்களால் நியாயமான ஆக்ஷன் எடுக்க முடியும் என கூறுகிறார். முதலில் அவர் விசாலாட்சியிடம் விசாரணை நடத்துகிறார். கொற்றவை விசாரணை நடத்துவதை திருட்டுத்தனமாக ஆதி குணசேகரனுக்கு போனில் காட்டுகிறார் அறிவுக்கரசி. அம்மா நம்மை விட்டுக்கொடுக்காது என்கிற மிதப்பில் இருக்கிறார் ஆதி குணசேகரன்.
விசாலாட்சி என்ன சொன்னார்?
ஆனால் போலீஸ் விசாரணையில் விசாலாட்சி செம ட்விஸ்ட் கொடுத்திருக்கிறார். தயங்கியபடி அமர்ந்திருந்த விசாலாட்சியிடம் யாருக்குமே பயப்படாமல், ஒளிவு மறைவு இல்லாமல் தைரியமா சொல்லுங்க என கொற்றவை கேட்க, அதற்கு விசாலாட்சி, என் பையன் நல்லவன் இல்லை என்று சொன்னதும், அதை போனில் கேட்டு ஆதி குணசேகரன் ஷாக் ஆகிறார். விசாலாட்சி, தன் மகனுக்கு எதிராக சாட்சி சொல்லி உள்ளதால், ஆதி குணசேகரனுக்கு அது பின்னடைவாக மாறி இருக்கிறது. அவருக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடில் பார்ப்போம்.

