“மாணவிகளை அழ வைக்கும் நடிகர் தாமு மீது நடவடிக்கை எடுங்க..” ப்ளூ சட்டை மாறன் ட்வீட்..
நடிகர் தாமு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ப்ளூ சட்டை மாறன் தனது X வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
வானமே எல்லை படத்தின் மூலம் 1992-ம் ஆண்டு தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தாமு. தொடர்ந்து நாளைய தீர்ப்பு, புதிய மன்னர்கள், ஆசை, வான்மதி லவ் டுடே, காதல் மன்னன், காதலுக்கு மரியாதை, அமர்க்களம், பெண்ணின் மனதை தொட்டு கில்லி என 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 90கள், 2000ளில் விஜய், அஜித், பிரசாந்த், பிரபுதேவா என இளம் ஹீரோக்களின் படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர்.
குறிப்பாக கில்லி படத்தில் ஓட்டேரி நரி கேரக்டரில் நடித்திருந்த இவருக்கு தனி ரசிக பட்டாளமே உள்ளது. மிமிக்ரி ஆர்டிஸ்ட்டான தாமு பல படங்களில் தனது மிமிக்ரி திறனையும் வெளிப்படுத்தி அசத்தி இருப்பார். குறிப்பாக சிவாஜி படத்தில் ரஜினிகாந்த் போல் மிமிக்ரி செய்து அசத்தி இருப்பார். முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே அப்துல்கலாமின் உதவியாளராக 7 ஆண்டுகள் தாமு பணியாற்றி உள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
நகைச்சுவை நடிகராக இருந்து வந்த தாமு, கல்வித்துறையில் சேவை செய்ய தொடங்கினார். அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளில் அவர் செய்த கல்விச் சேவைகளை பாராட்டி அவருக்கு தேசிய வளர்ச்சி கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் தேசிய கல்வியாளருக்கான ராஷ்டிரிய சிக்ஷா கவுர புரஸ்கார் என்ற விருது வழங்கப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாகவே பல கல்லூரிகள், மற்றும் பள்ளிகளிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு பேச்சாளராக தாமு உரையாற்றி வருகிறார். பெற்றோர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கின்றனர் என்று தாமு உணர்ச்சி பொங்க பேசும் போது, மாணவர்களும் குற்ற உணர்ச்சியால் அழும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
“நான் எந்த படத்தையுமே காப்பி அடிச்சது இல்ல.. ஆனா ஏன் அப்படி சொல்றாங்கன்னா..” அட்லீ ஓபன் டாக்
இந்த நிலையில் நடிகர் தாமு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ப்ளூ சட்டை மாறன் தனது X வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தனது பதிவில் “மாணவிகளை அழ வைத்து போலியான எமோஷனை கிளறிவிடும் இந்த நடிகர்.. இனி பள்ளி, கல்லூரி மேடைகளில் பேசுவதை தடுக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் கூற ஆரம்பித்துள்ளனர்.
இதற்கான நடவடிக்கையை தமிழக அரசு, தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரி நிர்வாகங்களும் உடனே எடுக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதே போல் தாமுவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் தங்களின் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.