தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பிகில்' திரைப்படம் வரும் தீபாவளி தினத்திற்கு வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், விஜய் தற்போதைய அரசியல் நிலவரங்கள் பற்றி பேசியது மிகபெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், இந்த படத்தின் ஆடியோ இசை வெளியீட்டு விழா நடைபெற்ற கல்லூரிக்கு, பட விழாக்கள் நடத்த அனுமதி கொடுத்தது ஏன் என, உயர் கல்வி துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

இதற்கு, ஒரு தரப்பினர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வந்தாலும் மற்றொரு தரப்பினர், எதிராக பேசி வருகிறார்கள்.

இந்நிலையில் 'பிகில்' படத்தின் டீசர் வெளியீடு குறித்த முக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, அக்டோபர் 2 ஆம் தேதி, பிகில் படத்தின் டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவலை தற்போது வைரலாக்க துவங்கி விட்டனர் ரசிகர்கள். ஏற்கனவே இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, அடிக்கடி 'பிகில்' படம் குறித்து ஏதேனும் சர்பிரைஸ் வந்து கொண்டே இருக்கும் என கூறியது போலவே... விஜய் ரசிகர்களை குஷியாக்கும் தகவல்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.